ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்

2008ல் ஆந்திர பிரதேசத்தில் 3 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த எஸ்.பி விசி சஜ்னார்தான் தற்போது இந்த ஹைதராபாத் என்கவுண்டருக்கு அனுமதி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்

    ஹைதராபாத்: 2008ல் ஆந்திர பிரதேசத்தில் 3 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த எஸ்.பி விசி சஜ்னார்தான் தற்போது இந்த ஹைதராபாத் என்கவுண்டருக்கு அனுமதி அளித்துள்ளார். விசி சஜ்னார் தற்போது சைபராபாத் கமிஷனராக இருக்கிறார்.

    ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது.

    ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர் செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது? அதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது?

    அனுமதி

    அனுமதி

    இந்த என்கவுண்டருக்கு சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார்தான் அனுமதி அளித்தது. இவர் ஏற்கனவே இதுபோல என்கவுண்டர் செய்து நாடு முழுக்க பிரபலம் ஆனார். 2008ல் வாராங்கல் பகுதியில் ஸ்வப்னிகா, பிரணிதா என்ற இரண்டு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. ஒரு தலை காதல் காரணம் இந்த ஆசிட் வீச்சு சம்பவம் நடந்தது.

    யார் அவர்கள்

    யார் அவர்கள்

    அப்போது ஸ்ரீனிவாச ராவ், ஹரிகிரிஷ்ணா, சஞ்சய், ஆகிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார் எஸ்பியாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். இவர்கள் 3 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார்.

    கொலை செய்தார்

    கொலை செய்தார்

    அப்போது போலீசார் மீது இவர்கள் தாக்குதல் நடத்த என்கவுண்டர் செய்யப்பட்டனர். சரியாக சம்பவம் நடந்த இடத்தில் வைத்து நான்கு பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். அப்போது அதே போல் ஹைதராபாத் கொலை வழக்கில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே வைத்து என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

    அட

    அட

    சம்பவம் நடந்த சைபராபாத் போலீஸ் கட்டுப்பட்டு பகுதியின் கமிஷனர் சஜ்னார்தான். அவரின் அதே ஸ்டைலில் இந்த என்கவுண்டர் தற்போது நடந்துள்ளது. இதனால் தற்போது ஹைதராபாத்தில் ஹீரோவாக சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார் உருவெடுத்துள்ளார்.

    என்ன சர்ச்சை

    என்ன சர்ச்சை

    2008 என்கவுண்டர் போலியானது , ஜோடிக்கப்பட்டது என்று புகார் உள்ளது. ஆனால் மக்கள் அவரை அப்போது பாராட்டினார்கள். தற்போது அதே போல் அவரின் தலைமையின் கீழ் இன்னொரு என்கவுண்டர் நடந்துள்ளது.

    English summary
    Hyderabad Doctor Murder: Commissioner VC Sajjanar already encountered 3 in an acid attack in 2008.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X