Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"AI சிப்கள்.." சென்னை, பெங்களூரை காலி செய்யும் ஹைதராபாத்! அமெரிக்க நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஐடி துறையில் கடந்த பல ஆண்டுகளாகவே பெங்களூர், சென்னை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் அதில் மிகப் பெரிய மாற்றம் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் ஐடி சார்ந்த முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஹைதராபாத் நிறுவனம் ஒன்று செமிகண்டக்டர் தொடர்பான மிக முக்கிய ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் சத்தமே இல்லாமல் ஐடி மற்றும் தொழில்நுட்பத் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இதற்கிடையே அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும் செமிகண்டக்டர் துறையில் ஹைதராபாத் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான முதலீடுகள் அங்கு வர ஆரம்பித்துள்ளது.

Chennai Bangalore

ஹைதராபாத் நிறுவனம்

இதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த புளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பைட் எக்லிப்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களும் இணைந்து, ஏஐ சிப்களை வடிவமைத்து உருவாக்கும். இந்தத் திட்டத்திற்காகச் சுமார் 15 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 132 கோடி) மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆயில் மற்றும் கேஸ் தொழிற்துறையினருக்குத் தேவையான சிப்கள் இங்கு உருவாக்கப்படும். செமிகண்டெக்டர் சிப்களை உருவாக்குவது ஒன்றும் அவ்வளவு ஈஸியான வேலை இல்லை. இதற்குச் சில ஆண்டுகள் வரை கூட தேவைப்படலாம். முதலில் ஆரம்பக் கட்டப் பணிகளை அடுத்த 18 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தகட்டப் பணிகள் சர்வதேச அளவில் மேற்கொள்ளவும் திட்டமிடப்படுகிறது.

பைட் எக்லிப்ஸ்

பைட் எக்லிப்ஸ் நிறுவனம் என்பது அமெரிக்காவில் இருக்கும் ஐஓடி ஹார்டுவேர் மற்றும் ஏஐ நிபுணத்துவம் பெற்ற ஐஓடி (internet of things) நிறுவனமாகும். சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளில் புளூ கிளவுட் சாஃப்டெக் நிறுவனம் அனுபவம் பெற்ற நிறுவனமாகவும் இருக்கிறது. இந்த நிறுவனம் தான் ஹைதராபாத் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

எட்ஜ் ஏஐ சிப்கள்

ஏஐ டூல்களை பிசாரஸ் செய்ய அதிகத் திறன் தேவை. நமது பல கருவிகளில் பிராசஸ் செய்யாது. நாம் அனுப்பும் இன்புட்கள் கிளவுட் சர்வருக்கு அனுப்பப்பட்டு, அங்கு தான் நமது இன்புட் பிராசஸாகும். ஆனால், இதுபோல ஒவ்வொரு முறையும் டேட்டா வெளியே சென்று வரும்போது காலதாமதம் ஆகும். ஆயில் மற்றும் எண்ணெய் எடுக்கும்போது ஒவ்வொரு நொடியும் முக்கியம்.. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் தவறாகப் போகலாம்.

ஏன் முக்கியம்

அந்த நேர விரயத்தை தான் எட்ஜ் ஏஐ சிப்கள் நீக்குகிறது. இந்த எட்ஜ் ஏஐ சிப்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட சாதனங்களிலேயே ஏஐ டாஸ்குகள் நடக்கும். அந்தளவுக்கு அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிராசசர்கள் ஆகும். இந்த சிப்கள் அதிகச் சக்தியைக் கொண்டுள்ளன. நொடிக்கு ஒரு லட்சம் கோடி ஆபேஷன்களை செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் இன்புட்களை ரிமோட் கிளவுட் சர்வருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் ரியல் டைமில், எந்தவொரு தாமதமும் இல்லாமல் வேலையைச் செய்து முடிக்க முடியும்.

இதன் மூலம் செலவு குறைந்து, செயல்திறன் கணிசமாக மேம்படும் என்று அந்நிறுவனம் கூறியது. இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற முக்கியமான துறைகளில் ஏஐ மற்றும் ஐஓடி தொழில்நுட்பங்கள் பயன்படத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2027ஆம் ஆண்டுக்குள் இது $1 பில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதியைச் சார்ந்திருக்கத் தேவையில்லை

ஏஐ துறை மிக முக்கியமானதாக உருவெடுக்கும் நிலையில், அதில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உள்நாட்டில் மேம்பட்ட செமி கண்டெக்டரை வடிவமைத்து உற்பத்தி செய்ய மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதற்காக 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன்' திட்டத்திற்கு ரூ. 76,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் முதல் 3-நானோமீட்டர் சிப் வடிவமைப்பு மையங்கள் நொய்டா மற்றும் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+