திருமணத்தை மறுத்ததால் 'எச்ஐவி' ஊசி போட்ட சைக்கோ.. ஒரு மாதம் நரக வேதனை! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
ஹைதராபாத்: தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாகத் தனது எச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் ஏற்றிய கொடூர சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியது. இந்தத் துரோகத்தால் மனமுடைந்த அந்த 24 வயது இளம்பெண், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தீராத பிரச்சினையாகவே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

திருமணம்
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் போச்சாரம் ஐடி காரிடார் பகுதியில் வசித்து வந்த பெண் ரமணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த பெண்ணுக்கும் அவரது உறவினரான மனோகர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வீட்டுப் பெரியவர்களே இவர்கள் கல்யாணத்தை முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்த நிச்சயதார்த்தம் ஒரு கொடூரமான முடிவை நோக்கித் திரும்பும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
மனோகரின் பெற்றோருக்கு ஏற்கனவே எச்.ஐ.வி பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரமணியின் பெற்றோர் முன்னெச்சரிக்கையாகக் கடந்த செப்டம்பர் மாதம் மனோகருக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். அந்தப் பரிசோதனையில் மனோகருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமணி, உடனடியாக இந்தத் திருமணத்தை ரத்து செய்தார்.
எச்ஐவி ஊசி
திருமணம் நின்ற ஆத்திரத்தில் இருந்த மனோகர், கடந்த மார்ச் 11ம் தேதி ரமணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவர் எச்ஐவி இருக்கும் ரத்தத்தை கையோடு கொண்டு வந்துள்ளார். அந்த ஊசி மூலம், எச்ஐவி பாதித்த ரத்தத்தை ரமணியின் உடலில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளார். இதனால் ரமணியும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், மனோகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
இருப்பினும், இந்தச் சம்பவத்தால் ரமணி கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். எச்ஐவி வைரஸ் செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்துள்ளார்.. இதனால் கடந்த ஒரு மாதமாக கடும் மன அழுத்தத்தில் இருந்த ரமணி, வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விபரீதம்
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என எனச் சந்தேகிக்கிறோம். எனினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
தற்கொலை தீர்வல்ல
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications