அல்லு அர்ஜுன் vs ஹைதராபாத் போலீஸ்.. புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது என்ன நடந்தது! 10 பாயிண்டுகள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்புக் காட்சியில் பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அல்லு அர்ஜுன் விவகாரத்தில் கடைசி சில நாட்களில் என்ன நடந்தது.. இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா போலீஸ், நடிகர் அல்லு அர்ஜுன் சொல்வது என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு அல்லு அர்ஜுன் சென்ற போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

allu arjun pushpa 2

இந்தச் சம்பவத்தில் கடந்த சில நாட்களில் என்ன நடந்தது... ஒவ்வொரு தரப்பும் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ரேவந்த் ரெட்டி:

  • கடந்த வாரம் தெலுங்கானா சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, "அல்லு அர்ஜுன் வெறும் சில மணி நேரம் மட்டுமே சிறையில் இருந்தார்.. ஆனால், அவரை சந்திக்கத் தெலுங்கு சினிமா இன்டர்ஸ்டிரியே சென்றுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு கை, கால், கிட்னி போய்விட்டதா? அதேநேரம் நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் குறித்து யாராவது கவலைப்பட்டீர்களா? இதன் மூலம் தெலுங்கு சினிமா உலகம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
  • மேலும் ரேவந்த் ரெட்டி, "தியேட்டரில் பெண் உயிரிழந்துவிட்டார் எனச் சொல்லிய பிறகும் அல்லு அர்ஜுன் கிளம்பவில்லை.. வலியுறுத்திய பிறகே கிளம்பினார். அப்போதும் ரோட்ஷோ நடத்தினார்.. அல்லு அர்ஜுன் என்ன மாதிரியான மனிதர்?" என்று காட்டமான கருத்துகளை முன்வைத்து இருந்தார்.


அல்லு அர்ஜுன்:

  • இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜுன், தான் இத்தனை காலம் சேர்த்து வைத்த நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இப்போது சில கருத்துகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்தார். அதேநேரம், இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம் தியேட்டரில் எந்தவொரு போலீஸ் அதிகாரியும் தன்னை சந்திக்கவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தார்.


தெலுங்கானா போலீஸ்:

  • இருப்பினும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா போலீஸ் நேற்று விரிவான பிரஸ் மீட்டை நடத்தியது. படத்தின் சிறப்புக் காட்சி ஓடி கொண்டு இருந்த போதே கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக அல்லு அர்ஜுனிடம் கூறியதாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் ஏசிபி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் படம் முடிந்த பிறகே வருவேன் என்று முதலில் கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
  • அதாவது ஏசிபி குமார் இரவு 10.45 மணி முதலே அல்லு அர்ஜுனிடம் உயிரிழப்பு குறித்தும் அங்கிருந்து வெளியேறும்படியும் இது குறித்துச் சொல்ல முயன்றதாகவும் இருப்பினும் அவரது மேனேஜர் சந்தோஷ் அவரை சந்திக்கவே விடவில்லையாம். பெண் உயிரிழந்துவிட்டது சொல்லியும் நடிகர் அல்லு அர்ஜுனை அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்ல மேனேஜர் சந்தோஷ் முயலவில்லை என்கிறார்கள் போலீசார்.
  • நீண்ட முயற்சிக்குப் பிறகு, இரவு 11.15 மணிக்குத் தான் அல்லு அர்ஜுனை ஏசிபி குமார் நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார். இருப்பினும், அல்லு அர்ஜுன் படம் முடிந்த பிறகே வெளியேறுவேன் என்று சொல்லியதாக போலீசார் தெரிவித்தனர்.
  • இதையடுத்து 11.40 மணிக்கு நேரடியாக இந்த விவகாரத்தில் டிசிபி நேரடியாகத் தலையிட்டுள்ளார். அல்லு அர்ஜுன் உடனடியாக வெளியேற நேரிடும் என்றும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார் என்றும் கூறியிருக்கிறார். அதன் பிறகே ஒரு வழியாக 12.05க்கு அல்லு அர்ஜுன் அங்கிருந்து வெளியேறியதாக போலீசார் கூறுகிறார்கள். மேலும், இது தொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+