ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் வரலாறு காணாத வெள்ளம்.. சென்னையில் ஏற்பட்ட அதே பாதிப்பு.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வரலாறு காணாத மழையால் மொத்த நகரும் வெள்ளத்தில் மிதக்கிறது. நகரின் முக்கிய சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அந்த வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்படும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் ஏற்பட்டதை போல் மிக மோசமான பாதிப்பை ஹைதராபாத் தற்போது சந்தித்துள்ளது. மோசமான வடிகால் அமைப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பால் வெள்ளம் பாய்ந்தோடுவதாக புகார் எழுந்துள்ளது.

Recommended Video

    ஹைதராபாத்தில் வரலாறு காணாத மழை.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

    ஹைதராபாத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் நகரின் ஓடும் ஆறு மற்றும் குளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரின் உள்கட்டமைப்புகளில் சரியான வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தால் மொத்த நகருக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

    கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் பயங்கர வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அதேபோன்ற பாதிப்பை இப்போது ஹைதராபாத் சந்தித்துள்ளது. ஆற்றங்கரையோரம் குடியிருப்பில் வசித்த ஏழை மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஹைதராபாத் மழை: வீடு இடிந்து விபத்து 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி ஹைதராபாத் மழை: வீடு இடிந்து விபத்து 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி

    பலர் மீட்கப்பட்டனர்

    பலர் மீட்கப்பட்டனர்

    வெள்ளத்தை கட்டுப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தெலுங்கானா அரசும், பேரிடர் படையும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உறைவிட வசதியை அளித்துள்ளது.

    வெள்ளம் மிதக்கிறது

    ஹைதராபாத் நகரில் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு, மிக மோசமானது ஆகும். அவற்றின் சில படங்களையும் வீடியோக்களையும் இப்போது பார்ப்போம். இந்த வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்படும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    வெள்ளத்தில் ஆறு

    ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் மேடான பகுதிகளுக்கு சென்றுவிட்டனர். முசி ஆற்றங்கரையோரத்தில் வீடுகளையும் சூழ்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    குளத்தில் வீடுகள்

    டுவிட்டரில் சுதாகர் உடுமுலா என்பர் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் ஆற்றின் போகும் வழியிலும், குளத்திலும் வீட்டை காட்டினால், நீர் அதன் பாதையை மீண்டும் எடுத்துக்கொள்ளும். அப்படித்தான் சட்டவிரோதமாக கமுனி செரு , மூசாபேட்டை, சஃப்தர்நகரில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதனால் அவை தற்போது வெள்ளத்தில் மிதக்கின்றன என்று கூறினார்.

    மீண்ட மக்கள்

    ஹைதரபாத்தில் ஒருவருக்கு ஒருவர் மனித சங்கிலி அமைத்து சாலையில் ஓடும் வெள்ளத்தை கடந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஆட்டோவில் பெண்கள் உள்பட சிலர் வருகிறார்கள். இடையில் வெள்ளம் அதிகமான நிலையில் நடுவழியில் நிறுத்தி மனித சங்கிலி மூலம் தப்பிக்கிறார்கள். மனித நேயம் ஒன்று தான் வெள்ளத்தில் இருந்து மீள உதவியுள்ளது.

    நகரை காலி செய்துவிட்டது

    டாக்டர் சங்கீதா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வெள்ளம் முக்கிய நகர சாலையில் பயங்கரமாக செல்கிறது. இதை பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களே பெய்த மழை, மொத்த நகரத்தையும் நிலைகுலையவைத்துள்ளது என்பது வேதனையான ஒன்று. சட்டவிரோத ஆக்கிரமிப்பு, மோசமான நிர்வாக நடைமுறை, பரிதாபகரமான வடிகால் அமைப்பு ஆகியவை நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டது. அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    ஹைதராபாத் மழை பலி

    ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையால்இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத்தில் ககன்பாத் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒரு குழந்தை உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல் பண்ட்லகுடா பகுதியில் ஒரு வீட்டின் மீது பாறை விழுந்து மூன்று பேர் பலியாகினர்.

    English summary
    the situation in Hyderabad after torrential rains. Be Safe and stay indoors. At least 11 people have died in Hyderabad following incessant rains that lashed the city, leading to waterlogging on roads and inundation of some low-lying areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X