கட்டு கட்டாக பணம்.. ரோட்டில் தூக்கி வீசி ரீல்ஸ் - சிக்கிய ஹைதராபாத் யூடியூபர்
ஹைதராபாத்: யூடியூபர்ஸ் கன்டென்ட்களுக்காக சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இர்பான், டி.டி.எஃப் வாசன், பிரியாணி மேன் என்று சர்ச்சைகளில் சிக்கிய யூடியூபர்களின் பட்டியல் நீளமானது. அப்படித்தான் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் யூடியூபர் ஒருவர் கன்டென்டுக்காக நடுத்தெருவில் செய்த சம்பவம் அவரை வழக்கில் சிக்க வைத்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷா என்ற இளைஞர், 'Its_me_power' என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலை 3.53 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர் கன்டென்ட்டுக்காக வித்தியாசமான யுக்திகளை யோசிப்பாராம். குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களையும், டூயட் ரீல்ஸ்களையும் அப்லோட் செய்து வந்தார். இது எல்லாரும் செய்வதுதானே என்று நினைக்கலாம். அதன்பிறகுதான் அவர் செய்த சம்பவங்கள் குறித்து வரப்போகிறது.

பொது இடங்களில் சென்று பணத்தை தூக்கி வீசி வீடியோ பதிவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மக்கள் பணத்தை எடுப்பதை ஷார்ட்ஸ் வீடியோவாக போட்டு வைரலாக்கி வந்தார். இப்படி ஒரு வீடியோ மட்டுமல்ல, ஹைதராபாத்தின் பிஸியான பகுதிகளுக்கு சென்று பணம் வீசுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார். இதேபோன்று நான் எந்த பகுதிகளுக்கு சென்று பணம் கொடுக்கப் போகிறேன் என்பதை தெரிந்துகொள்ள என் சேனலை பாலோ செய்யுங்கள் என்றும் சப்ஸ்க்ரைபர்ஸ்களுக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
மொட்டி நகர் பகுதியில் மற்றொரு இளைஞர் பைக்கை ஓட்டிவர, ஹர்ஷா பின்னால் இருந்து பணத்தை வீசிச் சென்றார். சில சாலைகளில் இவரே பைக் ஓட்டி சென்று பணத்தை வீசுவார். டி.டி.எஃப் வாசன் போல அவ்வபோது வாகனத்தை அசுர வேகத்தில் இயக்கியும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகளில் பணத்தை வீசி தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் சராசரியாக ரூ.50,000 மதிப்பிலான பணம் (பெரும்பாலும் 100 ரூபாய் நோட்டுகள்)
இதையடுத்து ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸ் யூடியூபர் ஹர்ஷா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல சனத்நகர் காவல்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து தெலங்கானா போலீஸ் எக்ஸ் தள பக்கத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சமூகவலைதள வீடியோ, ரீல்ஸ்களுக்காக பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுத்து, தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. அப்படி செய்வோர் லைக்ஸ், வியூஸ் உடன் வழக்கையும், சட்டரீதியான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று கூறியுள்ளது.
தன்னை பவர் ஹர்ஷா என்று பிரகடனப்படுத்தி வருகிறார். பணத்தை தூக்கி வீசுவதுடன் மட்டுமல்லாமல் தலைவர் வியூஸ்க்காக, அவ்வப்போது ஒயின்சாப்களுக்கு சென்று, அங்குள்ள குடிமகன்களுக்கு இலவசமாக மதுபானம் வாங்கிக் கொடுப்பதையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். ஒருபக்கம் 2கே கிட்ஸ்கள் அவரைக் கொண்டாடினாலும், எதிர்ப்புகளும் அதிகம் இருந்துள்ளன.
காவல்துறை இதுபோன்ற யூடியூபர்கள் மீது இறக்கம் காட்டக் கூடாது. நேர்மையாக, கடுமையாக உழைத்த பணமாக இருந்தால், அதை யாரும் இப்படி சாலையில் தூக்கி எறிய மாட்டார்கள். பணத்தை தூக்கி வீசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications