ஒன்னும் சரியில்லை! உள்துறை பொறுப்பை நானே ஏற்க வேண்டியிருக்கும்! பவன் கல்யாண் பேச்சு! அதிரும் ஆந்திரா
ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. உள்துறை அமைச்சர் சரியாக செயல்படாவிட்டால் அந்த பொறுப்பையும் நானே ஏற்பேன் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். ஆளும் கூட்டணி அரசில் உள்ள அமைச்சரையே பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்து இருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் அண்மையில், சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில்,ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை தழுவியது. தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து முதல்வராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக பவன் கல்யாணும் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆந்திராவில் பல்வேறு அதிரடி அரசியலை செய்து வரும் பவன் கல்யான் இன்று தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவரும், உள்துறை அமைச்சருமான அனிதாவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் உள்துறை அமைச்சர் தகுதியற்றவராக உள்ளார் எனவும் சாடியிருக்கிறார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி இருக்கும். எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை , பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும், இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியையும் நானே ஏற்பேன்..
நீங்கள் யோகி ஆதித்யநாத் போல இருக்க வேண்டும். அரசியல் தலைவர்களும் எம்.எல்.ஏக்களும் இங்கு வாக்கு கேக்க மட்டுமே இருக்கிறார்கள். உங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. அனைவரும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். நான் உள்துறை அமைச்சர் பொறுப்பை கேக்கிறேன் என்றோ விரும்புகிறேன் என்பதோ இது இல்லை. நான் இதை செய்தால் எல்லாம் வேறுபடும்.
யோகி ஆதித்யநாத் மாதிரி இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மாற மாட்டார்கள். நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றார். ஆளும் கூட்டணி அரசில் உள்ள அமைச்சரை கடுமையாக பவன் கல்யாண் விமர்சித்து இருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர இந்துதுத்வா நிலைப்பாட்டை கையாண்டு வரும் ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண், நேற்று தனது கட்சியில் புதிய அணி ஒன்றை அமைப்பதாக அறிவித்தார். சனாதன தர்மத்தை பாதுகாக்க தனியாக ஒரு அணி உருவாக்கியிருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications