தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்.. அடித்து சொன்ன அமித் ஷா!
ஐதராபாத்: தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்சக்கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.

கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. ஆனால், இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. மறுபக்கம் பாஜகவும் தேர்தல் களத்தில் உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் வரும் நவம்பர் 29 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, இன்று தெலுங்கானாவில் உள்ள ஜக்டியல் நகரில் தேர்தல் பிரசாரம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அமித்ஷா பேசியதாவது:- ஓவைசிக்கு பயந்து ஐதராபாத் மீட்பு நாளை கொண்டாட சந்திரசேகர் ராவ் அச்சப்படுகிறார். ஆனால், நாங்கள் ஓவைசிக்கு அச்சப்படவில்லை. நாங்கள் ஐதராபாத் மீட்பு நாளை மாநில நாளாக கொண்டாடுகிறோம்.
ஓவைசி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கேசிஆர் கட்சியின் சின்னம் கார் ஆகும். ஆனால் அவர்களிடம் கட்சியின் ஸ்டீரிங் (கட்டுப்பாடு) இல்லை. பாஜக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அதை எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு வழங்குவோம" என்றார். பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் இதை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications