ஹிஜாப் கூடாதுன்னா? முஸ்லிம் பெண்கள் பிகினி உடை அணிய வேண்டுமா? அசாதுதீன் ஒவைசி ஆவேசம்
ஹைதராபாத்: முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்றால், அவர்கள் என்ன பிகினி உடைகளையா அணிய வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதின் ஒவைசி ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், ஹிஜாபை தடை செய்வதன் மூலம் முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமகன்களை போல பார்க்கப்படுவார்கள் எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.
ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், அசாதுதின் ஒவைசி இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சில நாட்களிலேயே இந்த விவகாரம் கர்நாடகாவில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் காட்டுத் தீ போல பரவியதுடன், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாபை அணிந்து வர கர்நாடாகா அரசு தடைவிதித்தது. இதனை கர்நாடகா உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவே, முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. ஒரு நீதிபதி ஹிஜாப் தடைக்கு ஆதரவாகவும், மற்றொரு நீதிபதி எதிராகவும் தீர்ப்பளித்தனர். இதனால் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு ஹிஜாப் விவகாரம் மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகளால் சர்ச்சை
ஹிஜாப் விவகாரம் இவ்வாறு இழுத்துக்கொண்டே செல்வது முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், இந்த மாறுபட்ட தீர்ப்பு வந்தது முதலாக, சில பாஜக தலைவர்கள் ஹிஜாபை எதிர்த்து மோசமாக கருத்து கூறி வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஹரியாணா அமைச்சர் ஒருவர், "சுயகட்டுப்பாடு இல்லாத ஆண்களே, ஹிஜாபை அணிய பெண்களை வற்புறுத்துகின்றனர்" என பேசியிருந்தார்.

ஒவைசி ஆவேசம்
இந்நிலையில், ஹைதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஹிஜாப் விவகாரம் குறித்து சில காட்டமான கருத்துகளை முன்வைத்தார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. நம் நாட்டில் சீக்கியர்கள் டர்பன் அணிந்து கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் சிலுவை அணிந்து கொள்ளலாம். இந்துக்கள் விபூதி பூசிக்கொள்ளலாம். ஆனால், முஸ்லிம் மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணியக்கூடாது. ஹிஜாப் மத அடையாளம் என்றால், மேற்கூறியவை எல்லாம் என்ன?

பிகினி அணிய வேண்டுமா?
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் ஹிஜாப் அணிவது உங்கள் மதத்தை கொச்சைப்படுத்துகிறதா? முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்றால் வேறு எதை அணிய வேண்டும்.. அவர்கள் பிகினி உடைகளைதான் அணிய வேண்டுமா? உங்களுக்கு தேவை என்றால் அதை அணிந்து கொள்ளுங்கள். நாங்கள் எதை அணிந்தால் உங்களுக்கு என்ன? ஏன் எங்கள் மதத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்க பார்க்கிறீர்கள்?

மூன்றாம் தர குடிமக்களா?
ஹிஜாபை தடை செய்வதன் மூலம் இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய பெண்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டத்தை நீங்கள் கொண்டு செல்கிறீர்கள்?அதாவது முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்கு நீங்கள் விதைக்கிறீர்கள். மதம் சார்ந்த சுதந்திரம் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே மக்கள் அடுத்தவர்கள் கலாச்சாரத்தை புரிந்துகொள்வர். அப்போதுதான் நம் நாடும் ஒற்றுமையாக இருக்கும்.

எங்கும் செல்ல மாட்டோம்?
முஸ்லிம் மதத்தையும், கலாச்சாரத்தையும் இந்தியாவில் இருந்து அகற்ற சில பிளவுப்படுத்தும் சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால், முஸ்லிம்கள் நாங்கள் இந்தியாவை விட்டு எங்கும் செல்ல மாட்டோம். இது எங்கள் நாடு. இந்தியாவில்தான் பிறந்தோம். இந்தியாவில்தான் நாங்கள் உயிர் மரிப்போம். அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை அடைய நாங்கள் போராடுவோம். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். இவ்வாறு அசாதுதின் ஒவைசி கூறினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications