"மோடிக்கு வாக்களிக்க மாட்டார்கள், ஏனென்றால்.." ஆஹா இது புதுசா இருக்கே! ரேவந்த் ரெட்டி சொல்வதை கேளுங்க
ஹைதராபாத்: மோடியின் உத்தரவாதம் காலாவதியாகிவிட்டதால் லோக்சபா தேர்தலில் நிச்சயம் "இந்தியா" கூட்டணியே வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

அடுத்து நான்காம் கட்ட தேர்தல் வரும் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல்: 4ஆம் வாக்குப்பதிவு நடக்கும் முக்கியமான மாநிலங்களாக ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் இருக்கிறது. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு அனைத்து தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கி உள்ளது.
ரேவந்த் ரெட்டி மாநிலம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இதற்கிடையே இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனச் சொன்ன அவர், மக்கள் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது குறித்தும் விளக்கி இருக்கிறார்.
ரேவந்த் ரெட்டி: பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டியில், லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வென்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "மோடிஜியின் உத்தரவாதங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டது. நாட்டில் ஒரு மாற்றம் வரப் போகிறது.. இந்தத் தேர்தலில் பாஜக தோல்வி அடையப் போவது நிச்சயம்..
என்ன காரணம்: நான் கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் பிரச்சாரம் செய்தேன்.. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள சூழல் குறித்தும் தகவல்கள் வருகிறது. வாரண்டி எல்லாம் காலாவதி ஆகிவிட்டதால் மோடியை நம்பி மக்கள் வாக்களிப்பது கடினம்.. இதன் காரணமாகவே இந்தத் தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்கிறேன்" என்றார்.
இந்த லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் டார்கெட் என்ன கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரேவந்த் ரெட்டி, "இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.. அதுவே எங்கள் டார்கெட். கேரளாவில் 20 இடங்களிலும், தமிழகத்தில் 39க்கு 39 இடங்களிலும், பாண்டிச்சேரியில் ஒரு இடத்திலும், கர்நாடகாவில் குறைந்தபட்சம் 14 இடங்களிலும், தெலுங்கானாவில் 14 இடங்களிலும் வெற்றி பெறுவோம்
மேஜிக் எண்: 272 என்பது மேஜிக் எண்.. இந்தியா கூட்டணிக்கு அந்த 272 இடங்களைக் காட்டிலும் கூடுதலாகவே சீட்கள் கிடைக்கும்.. 400 இடங்கள் அது இது என்று பாஜகவைப் போலக் காங்கிரஸ் ஒருபோதும் வெற்று கோஷங்களை எழுப்புவதில்லை.. ஆனால், தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்வோம். இந்த முறை 25 உத்தரவாதங்களை முன்வைத்து தேர்தல் எதிர்கொள்கிறோம். அதற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது வாக்குறுதிகளை எதையுமே செய்யவில்லை.. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள், கருப்புப் பணத்தை மீட்பது, ஏழை மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது என்ற பல பல வாக்குறுதிகளை அளித்தார்.. ஆனால், அதில் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை" என்று சாடினார்.












Click it and Unblock the Notifications