ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆந்திர சட்டமன்ற குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர முதல்வராக ஒய்எஸ்ஆர்சி கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் 25 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.

நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இதில் ஆந்திர சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி.

காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

எம்எல்ஏக்கள் கூட்டம்

எம்எல்ஏக்கள் கூட்டம்

போட்டியிட்ட175 தொகுதிகளில் 151 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது ஜெகனின் ஒய்எஸ்ஆர்சி. இந்நிலையில்
ஒய்எஸ்ஆர்சி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் விஜயவாடாவில் இன்று நடைபெற்றது.

சட்டமன்றக்குழு தலைவர்

சட்டமன்றக்குழு தலைவர்

இதில் இந்த கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி முறைப்படி தேர்வு செய்யப்படார். இதைத் தொடர்ந்து, ஆந்திர மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மனை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

30ஆம் தேதி பதவியேற்பு

30ஆம் தேதி பதவியேற்பு

வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

மோடிக்கு அழைப்பு?

மோடிக்கு அழைப்பு?

இதனிடையே ஜெகன் மோகன் ரெட்டி நாளை பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை அவர் அழைப்பார் என கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில்

கடந்த தேர்தலில்

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 175 தொகுதிகளில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 67 இடங்களில் மட்டுமே கைப்பற்றி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. இந்நிலையில் 5 ஆண்டுகள் காத்திருந்த ஜெகன் 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி முதல் முறையாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
YSRC party leader Jagan Mohan reddy has been elected as the Legislative party leader at the MLAs meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X