பாஜகவிற்கு அடுத்த அடி.. அதிமுகவை தொடர்ந்து பவன் கல்யாணும் விலகல்.. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு
ஹைதராபாத்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து அதிமுக விலகிய நிலையில், பவன் கல்யானின் ஜனசேனா கட்சியும் விலகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு (டிடிபி) ஆதரவாக ஜன சேனா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண, சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கவும் முடிவு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற போகிறது. தற்போது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்து வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். லோக்சபா தேர்தலுக்கு முன், ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாக கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டார்.
இதுபற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். பிரிந்ததற்கு வேறு காரணம் இல்லை. இங்கே நடந்த சில நிகழ்வுகள் எங்கள் கட்சியினரை காயப்படுத்தியது. கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். இதன் மூலம் பாஜக கூட்டணியில் அதிமுக 2024 தேர்தலில் இணைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதனிடையே பாஜகவிற்கு அடுத்த அடியாக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இவரது கட்சிக்கு ஆந்திராவில் ஓரளவிற்கு நல்ல ஆதரவு உள்ளது. ஆந்திராவில் ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பவன் கல்யாண் இறங்கி உள்ளார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவருக்கு ஆதரவாக பவன் கல்யாண் இறங்கி உள்ளார். சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கவும் பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இணைந்திருப்பது ஜெகனுக்கு இந்த முறை சட்டசபை தேர்தலில் கடும் சவாலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஏற்கனவே பாஜகவுக்கு ஆந்திராவில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை.தற்போது ஜனசேனாவும் கூட்டணியில் இருந்து விலகி இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறத.
இது தொடர்பாக பவன் கல்யாண் கூறுகையில், தெலுங்கு தேசம் வலுவான கட்சி, ஆந்திரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி தேவைப்படுகிறது. இன்று அதற்காக தெலுங்கு தேசம் கட்சி போராடுகிறது, நாங்கள் அவர்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்போம். இந்த சூழ்நிலையில் தெலுங்கு தேசமும் ஜனசேனாவும் இணைந்தால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு காலியாகிவிடும்" என்றார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் செப்டம்பர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராடி வருகிறார்கள். தற்போது பவன் கல்யாணும் போராட்டத்தில் இறங்கப்போவதாக அறிவித்திருப்பது ஆந்திராவில் புயலை கிளப்பி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications