சிவப்பு தொப்பி! சந்தன கலர் சட்டை, ப்ளூ ஜீன்ஸ்! மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஜானி மாஸ்டர்
ஹைதராபாத்: பெண் நடன உதவி இயக்குநருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஹைதராபாத் உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் நடன இயக்குநர் 16 வயதாக இருக்கும் போது அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்ற ஜானி மாஸ்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த புகார் எழுந்ததுமே ஜானி மாஸ்டர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து பெங்களூரில் இருந்த அவரை நேற்றைய தினம் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர் இன்றைய தினம் ஹைதராபாத் உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் அப்போது சிவப்பு நிறத்தில் தொப்பி அணிந்திருந்தார். சந்தன நிறத்தில் சட்டையும் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தார்.
தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன், ராம் சரண், ரவி தேஜா உள்ளிட்டோருக்கு நடனத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஜானி. இவர் தமிழிலும் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குநராக இருந்துள்ளார். காந்த கண்ணழகி, ரவுடி பேபி, செல்லம்மா, ரஞ்சிதமே, அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, ஜெயிலர் படத்தில் காவாலா, மேகம் கருக்காதா, புஷ்பா படத்தில் ஸ்ரீவல்லி உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனத்தை அமைத்துள்ளார்.
மேகம் கருக்காதா பாடலுக்கு ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது. கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர்களும் களத்தில் இருக்கிறார்கள். அது போல் புதிதாக வந்த ஜானி மாஸ்டரும் பிரபலங்களுக்க கொரியோகிராப் செய்கிறார். இப்படி புகழ் பெற்ற ஜானி மாஸ்டர் மீத 21 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை தெரிவித்துள்ளார்.
அதாவது அந்த பெண் ஜானி மாஸ்டருடன் பணியாற்றிய போது சென்னை, ஊட்டி, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண் கூறியிருப்பதாவது: நான் கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் சில திரைப்படங்களில் பணியாற்றினேன். படப்பிடிப்புக்காக நான் அவருடன் சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற போது என்னை அவர் பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
அது போல் ஹைதராபாத்தில் நான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் அவர் என்னை பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் ஜானி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications