கலாஷேத்ரா பாலியல் புகார்..தோழி வீட்டில் பதுங்கிய ஹரிபத்மன்..காட்டிக்கொடுத்த சிக்னல்..தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தோழி வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் குற்றம் சாட்டினர். புகாருக்கு ஆளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர். பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மாணவிகள் கூறவே கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கலாஷேத்ரா
இதனையடுத்து கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். 2 நாட்கள் போராட்டம் நீடித்தது. ஊடகங்களிலும் மாணவிகள் போராட்டம் குறித்த செய்திகள் வெளியானது. இரண்டு நாட்கள் இரவு பகலாக போராட்டம் நீடித்தது. எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் கூறினர். மாணவிகளின் போராட்டம் தீவிரமடையவே கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் உறுதி
இதனையடுத்து கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். 2 நாட்கள் போராட்டம் நீடித்தது. கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கலாஷேத்ரா விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான புகார்கள் எதுவும் வரவில்லை. இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மகளிர் ஆணையம் விசாரணை
இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவி, மாணவிகள் நான்கு பேர் மேல் புகார் கூறியுள்ளனர். மாணவிகள் கட்டுக்கட்டாக புகார் அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

கேரளா மாணவி புகார்
கல்லூரியில் சிறப்பு பயிற்சி என்ற பெயரில் இவர் உட்பட 4 பேர் தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக மாணவிகள் புகார்கள் அளித்தனர். இதை வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும், விசாரணை நடத்த வந்த மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். குறிப்பாக ஹரி பத்மன் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

மாயமான ஹரி பத்மன்
கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டனர். இதையடுத்து இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீரென தலைமறைவானர். கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். காவல்துறையினர் தேடுவதை அறிந்து அங்கிருந்து அவர் மாயமானார். இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடத்தொடங்கினர்.

ஹரி பத்மன் கைது
ஹைதராபாத்தில் இருந்து ஹரிபத்மன் சென்னை திரும்பி விட்டதாகவும் அவர் சென்னையில்தான் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவரது செல்வோன் சிக்னல்களை கண்காணிக்கத் தொடங்கினர். ஹரி பத்மனை தேடி வந்த போது அவரது பெண் தோழி முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். சென்னை மாதவரத்தில் உள்ள பெண் தோழி வீட்டின் முதல் தளத்தில் பதுங்கி இருந்ததை கண்டறிந்த போலீசார், பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். செல்போன் சிக்னலை வைத்து பெண் தோழி வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஹரி பத்மனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தன் மீது புகார் கூறிய அனைவரிடம் சகஜமாக மட்டுமே பழகினேன் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹரிபத்மன் கூறியுள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications