BRS கட்சியில் இருந்து விலகினார் கவிதா.. MLC பதவியும் ராஜினாமா! தனிக் கட்சி தொடங்க முடிவு?
ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவின் மகளும் தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, கட்சியிலிருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், கவிதா, இன்று பி.ஆர்.எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். கவிதா புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. "தெலுங்கானா பகுஜன ராஷ்ட்ர சமிதி" (TBRS) என்பது அவரது புதிய கட்சியின் பெயராக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகக் காரணமாக இருந்தவர்களில், முக்கியமான தலைவர் சந்திரசேகர் ராவ். 2001 ஆம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை துவங்கிய சந்திரசேகர் ராவ், தெலுங்கானா உருவானதும், முதலமைச்சராக 2014 ஆம் ஆண்டு பதவியேற்று, 2023 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தார். இதனைத்தொடர்ந்து தேசிய அரசியல் களத்தில் சாதிக்கும் முனைப்போடு கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றினார்.

பிஆர்எஸ்
தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் ஆட்சி பறிபோன பிறகு கட்சியில் உட்கட்சிப் பூசல் வெடித்தது. சந்திரசேகர ராவ் - அவரது மகள் கவிதா இடையேயும் மோதல் ஏற்பட்டது. மேலும் சகோதரர் ராமாராவுடனும் மோதல் வெடித்தது. இதனையடுத்து, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து கவிதா பேசத் தொடங்கினார். மேலும் கட்சியின் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
சந்திரசேகர ராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு சக கட்சி நிர்வாகியான ஹரிஸ் ராவ் தான் காரணம் என்றார். காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால், பிஆர்எஸ் தலைவர்கள் ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ஆகியோர்தான் பொறுப்பு, சிஆரின் கண்களை மறைத்து அவர்கள் பெரும் சொத்துக்களைக் குவித்தனர், அவர்களுக்கு பின்னணியில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இருக்கிறார் என்று கவிதா நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
கவிதா சஸ்பெண்ட்
இந்நிலையில், கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார். தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதிய கட்சி?
பிஆர்எஸ் கட்சியில் இருந்து மகள் கவிதா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இநிந்லையில், கவிதா தனது எம்.எல்.சி பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. "தெலுங்கானா பகுஜன ராஷ்ட்ர சமிதி" (TBRS) என்பது அவரது புதிய கட்சியின் பெயராக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கான கட்சியாக அவரது கட்சி இருக்கும் என கவிதாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் 160 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் கவிதா. அவர் தனது கலாச்சார அமைப்பான தெலுங்கானா ஜக்ருதியை மீண்டும் உயிர்ப்பித்து வலுப்படுத்தினார், அதே கொடியின் கீழ் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
கவிதா விலகல்
பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி விட்டதாகவும் கூறி உள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, கே. சந்திரசேகர் ராவும் கே.டி. ராமா ராவும் என் குடும்பத்தினர். நாங்கள் ரத்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள். கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாலோ, பதவிகளை இழந்தாலோ இந்த பிணைப்பு முறிந்துவிடக் கூடாது. நான் ஒருபோதும் தெலுங்கானா மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. ஆனால், சிலர் தங்களின் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் சிதைந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்ற என் தந்தைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான நோக்கங்களைப் பார்க்குமாறு என் தந்தையிடம் கேட்டுக் கொள்கிரேன். பிஆர்எஸ் குடும்பத்தை சுயநலத்துக்காக உடைத்துவிட்டார்கள். நான் பிஆர்எஸ் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து விலகுகிறேன். எனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications