ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருவெறுப்பு.. தமிழ்நாட்டிற்காக பாய்ந்து வந்த கேசிஆர்.. ஆளுநர் ரவிக்கு பறந்த "அட்வைஸ்".. பின்னணி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தமிழ்நாடு ஆளுநர் ரவி குறித்து தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் விமர்சனம் செய்து பேசி உள்ளார். அதேபோல் மற்ற மாநில ஆளுநர்கள் குறித்தும் கேசிஆர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆளுநருக்கும் முதல்வர் தரப்பிற்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும், முதல்வர் தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆளுநர் தமிழிசைக்கு எதிராக கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் இதேபோல் ஆளுநர் ஜக்தீப் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு கருணையே கிடையாது! ஊட்டியில் நின்றபடி, சூடாக நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு கருணையே கிடையாது! ஊட்டியில் நின்றபடி, சூடாக

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் குறித்தும், மற்ற மாநில ஆளுநர்கள் குறித்தும் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக பேசி உள்ள கேசிஆர், ஆளுநர் முறையே தவறானது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள்.

எம்எல்சி

எம்எல்சி

முக்கியமாக மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரி அம்மாநிலத்தில் 12 எம்எல்சி நியமனத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கும், துணை வேந்தர் நியமன மசோதாவிற்கும் ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை என்று நினைக்கிறன். 1984ல் மக்கள் பெரும்பான்மையுடன் வந்த என்டி ராமா ராவ் ஆட்சியை அப்போதைய ஆளுநர் ராம்லால் கலைத்தார்.

மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு

கடைசியில் மக்கள் எதிர்ப்பால் மீண்டும் அவரின் ஆட்சி கொண்டு வரப்பட்டது. ஆளுநர் அப்போது வேறு வழியின்றி ராஜினாமா செய்தார். 200 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் என்டிஆருக்கு ஆதரவாக நின்றனர். அங்கு ஜனநாயகம் வென்றது. அதில் இருந்து பாஜக எந்த பாடத்தையும் கற்கவில்லை போல. காங்கிரஸ் அப்போது எதிர்கொண்ட அதே எதிர்ப்பை பாஜகவும் எதிர்கொள்ளும். அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படவில்லை என்றால் பாஜக நியமனம் செய்யும் ஆளுநர்கள் இதே பாடத்தை கற்பார்கள். கடைசியில் மக்கள் எதிர்பால் மீண்டும் அவரின் ஆட்சி கொண்டு வரப்பட்டது. ஆளுநர் அப்போது வேறு வழியின்றி ராஜினாமா செய்தார். 200 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் என்டிஆருக்கு ஆதரவாக நின்றனர். அங்கு ஜனநாயகம் வென்றது. அதில் இருந்து பாஜக எந்த பாடத்தையும் கற்கவில்லை போல. காங்கிரஸ் அப்போது எதிர்கொண்ட அதே எதிர்ப்பை பாஜகவும் எதிர்கொள்ளும். அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வில்லை என்றால் பாஜக நியமனம் செய்யும் ஆளுநர்கள் இதே பாடத்தை கற்பார்கள்.

என்டிஆர்

என்டிஆர்

மக்களுக்கு எதிராக.. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு இருக்கிறார். ஆளுநர்களின் செயல்கள் அருவெறுப்பாக உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் மத்திய அரசு ஆளுநரை வைத்து கேம் ஆடுகிறது. ஆளுனரின் செயல்கள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. ஆளுநர்கள் அரசியலமைப்பை பின்பற்றாமல் தீயவர்கள் போல செயல்படுகிறார்கள், என்று கேசிஆர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி


தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் நியமனம், நீட் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஆளுநர் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் உள்ளது. தெலுங்கானாவில் இதே மோதல்தான். தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையிலான மோதல்தான் இந்த டெல்லி பயணத்திற்கு காரணம். இந்த மோதல் தொடங்கி எம்எல்சி பதவி ஏற்பில் இருந்துதான். தெலுங்கானா மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது.

தமிழிசை

தமிழிசை

இதை தமிழிசை ஏற்றுக்கொள்ளாததும் இந்த மோதலுக்கு காரணம். கவுசிக் ரெட்டி கட்சி சார்புடையவர் என்பதால் அவரை ஏற்கவில்லை என்று தமிழிசை காரணம் சொன்னார். இதையடுத்து தமிழிசையை அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் கேசிஆர் புறக்கணித்தார். அங்கு ஆளுநர் உரை இல்லாமலே பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் நடந்த பல்வேறு கூட்டங்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
KCR statement against Tamil Nadu governor RN Ravi amid his fight with Telangana governor Tamilisai. தமிழ்நாடு ஆளுநர் ரவி குறித்து தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் விமர்சனம் செய்து பேசி உள்ளார். அதேபோல் மற்ற மாநில ஆளுநர்கள் குறித்தும் கேசிஆர் விமர்சனம் செய்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X