ஹெல்த் சரியில்லன்னாங்களே! தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு! தெலுங்கானாவில் திடீர் பிரச்சாரம்
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலில் ஹைதராபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தை குஷ்பு பாஜகவிற்காக மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உடல்நிலை காரணமாக இவர் பிரச்சாரம் செய்யவில்லை.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கட்டம் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் நடக்கிறது.

மூன்றாம் கட்டத்தில் அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கும்.
இதில் நான்காம் கட்ட தேர்தலில் தெலுங்கானாவில் உள்ள 17ம் தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடக்கிறது. அடிலாபாத், பெத்தபள்ளே, கரீம்நகர், நிஜாமாபாத், ஜாஹிராபாத், மேடக், மல்கஜ்கிரி, செகந்திராபாத், ஹைதராபாத், செவெல்லா, மஹ்பூப்நகர், நாகர்கர்னூல், நல்கொண்டா, போங்கீர், வாரங்கல், மஹபூபாபாத், கம்மம் ஆகிய தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.

தெலுங்கானா தேர்தல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஹைதராபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தை குஷ்பு பாஜகவிற்காக மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உடல்நிலை காரணமாக இவர் பிரச்சாரம் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் சில நாட்கள் மட்டும் பிரச்சாரம் செய்த குஷ்பு, சில நேரங்களில், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன். நான் என்னை அர்ப்பணித்துள்ளேன்

எங்கள் அன்புக்குரிய பிரதமரின் பாதையை பின்பற்றி வருகிறோம் நரேந்திர மோடி வெற்றிக்காக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் மூழ்கிவிட்டேன். ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக நான் என் உடல்நிலை காரணமாக பிரச்சாரத்தை நிறுத்த, முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், அதற்கு உடனடி கவனம் தேவைப்படும் என்பதால் பிரச்சாரத்தை நிறுத்துகிறேன். எலும்பின் காயம் காரணமாக பிரச்சாரத்தை நிறுத்துகிறேன். விரைவில் குணமடைய உங்கள் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை,
2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தைத் தொடர்ந்து, எனக்கு முதலில் எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது, தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை.

பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு எனக்குக் கண்டிப்பாக அறிவுறுத்தியது. அது எனது நிலையை மோசமாக்கும் மற்றும் மோசமடையச் செய்யும். அர்ப்பணிப்புள்ள காரியகர்த்தா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உண்மையான அர்ப்பணிப்புள்ள பாஜக போர்வீரன் என்ற முறையில் எனது மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக, வலி மற்றும் வேதனை இருந்தபோதிலும், என்னால் முடிந்தவரை உழைத்து பிரச்சாரம் செய்தேன். எதிர்பார்த்தபடியே உடல்நிலை மோசமடைந்தது.
அதனால் இனிமேல் பிரச்சாரம் செய்ய மாட்டேன். பிரச்சாரத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன், என்று குஷ்பு தெரிவித்தார்.
குஷ்பு பிரச்சாரம்: ஆனால் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யாத குஷ்பு, செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கிஷன் ரெட்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
செகந்திராபாத் ஷேக்பேட்டையில் உள்ள சிவாஜி சவுக் அருகே உள்ள சிவாஜி சிலைக்கு குஷ்பு மாலை அணிவித்தார். பின்னர், கிஷன் ரெட்டியுடன் ரோட் ஷோவில் பங்கேற்றார். அவரை காண உள்ளூர் தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications