அடுத்தது ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் அவர் படம்- அதானே? மத்திய அரசு மீது கேசிஆர் கட்சி பாய்ச்சல்
ஹைதராபாத்: குஜராத் மாநிலம் அகதமாபாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பெயரை மாற்றி பிரதமர் மோடி பெயரை சூட்டியதற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் ஜூரம் அனலடிக்கத் தொடங்கி உள்ளது. தெலுங்கானாவுக்கு முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) தயாராகி வருகிறது.

தெலுங்கானா நிலவரம்
தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ்தான் இருந்து வருகிறது. ஆனால் காங்கிரஸின் இடத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ்/ பாஜக என்ற நிலைமைதான் உருவாக வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். இதற்காக இந்துத்துவா செயல் திட்டங்களை கையில் எடுத்து தீவிரமாக களப்பணியாற்றுகிறது பாஜக.

டிஆர்எஸ் வியூகம்
இன்னொரு பக்கம், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளுடன் மிக நெருக்கம் காட்டுகிறது டிஆர்எஸ். மேலும் தேசிய அளவிலான கட்சி ஒன்றையும் முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்க உள்ளார். அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரையும் கேசிஆர் சந்தித்து பேசி பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தார். அத்துடன் பாஜகவின் பி டீம், டிஆர்எஸ் என்ற விமர்சனங்கள் இம்மியளவும் துளிர்க்கக் கூடாது என்பதில் அக்கட்சி மிக கவனமாக உள்ளது.

மத்திய அரசுக்கு பதிலடி
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல்தலைவரும் தொழில்துறை அமைச்சருமான கே.டி.ராமராவ், பாஜகவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது: அகமதாபாத்தின் எல்ஜி மருத்துவ கல்லூரியின் பெயர் பிரதமர் மோடியின் பெயரால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்தார் படேல் ஸ்டேடியத்தின் பெயருக்கும் பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்படியே போனால், இனி அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துக்கு பதில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிடுங்கள் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிடக் கூடும். இவ்வாறு கேடி ராமராவ் விமர்சித்துள்ளார்.

அகமதாபாத் பெயரை மாற்றுங்களேன்..
முன்னதாக, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ், தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயரை பாக்யா நகர் என மாற்றுவோம் என கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக அகமதாபாத் நகருக்கு அதானியின் பெயரை ஏன் சூட்டக் கூடாது என கிண்டலடித்திருந்தார் ராமராவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications