Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் VS டிஆர்எஸ்.. சொந்த தொகுதிலேயே ஜெயிக்கல! “சர்வதேச தலைவர்” என ராகுலை கலாய்த்த கேசிஆர் மகன்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: சொந்த தொகுதியில் கூட வெற்றிபெற முடியாத காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசிய கட்சி கனவோடு இருக்கும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது எனது சந்திரசேகர் ராவ் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா புதிய மாநிலம் தொடங்கப்பட்டது முதல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடங்கு அங்கு சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு ஐதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க ஆபரேசன் சவுத் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார்.

பாஜகவுக்கு எதிராக கேசிஆர்

பாஜகவுக்கு எதிராக கேசிஆர்

தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்துக்கு அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சென்றனர். ஆனால், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பாஜகவை விமர்சித்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது தேசிய அரசியலில் நுழைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு தேசிய கட்சியையும் தொடங்கினார் அவர்.

 டிஆர்எஸ் எம்.எல்.ஏக்கள்

டிஆர்எஸ் எம்.எல்.ஏக்கள்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்கள் ரோகித் ரெட்டி, பாலா ராஜு, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ் ஆகியோருக்கு தலா ரூ.100 கோடி வரை கொடுத்து பாஜக குதிரை பேரம் நடத்தியதாக கூறி ஆடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒற்றுமை யாத்திரை

ஒற்றுமை யாத்திரை

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் பாத யாத்திரை தொடங்கிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகா பயணத்தை முடித்துவிட்டு தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் சென்று வருகிறார். இந்த நிலையில் இன்று ரங்காரெட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் கூட்டணி வைப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ராகுல் காந்தி பதில்

ராகுல் காந்தி பதில்

இதற்கு பதிலளித்த ராகுல், டி.ஆர்.எஸ். காங்கிரஸ் உறவு என்ற கேள்விக்கே இடம் இல்லை. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தான் ஒரு தேசிய கட்சியை நடத்தி வருவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார். சர்வதேச கட்சியை நடத்துவதாக அவர் நினைத்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம்." என்று விமர்சித்து உள்ளார்.

 கேசிஆர் மகன் பதிலடி

கேசிஆர் மகன் பதிலடி

இந்த நிலையில் ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர் ராவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமாராவ், "தனது சொந்த தொகுதியான அமேதியில் கூட வெற்றிபெற முடியாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி, தேசிய கட்சி கனவோடு இருக்கும் சந்திரசேகர் ராவை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. பிரதமராக விரும்பும் ராகுல் காந்தி முதலில் தங்கள் மக்களிடம் தன்னை எம்பியாக தேர்வு செய்ய சொல்ல வேண்டும்." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+