லண்டன் மாப்பிள்ளைக்கு நடிகை அஷூ மீது வந்த ஆசை.. 7 வருடம் ₹9.35 கோடி கொட்டி? கனவிலும் இப்படி நடக்காது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகரையே அதிரவைத்துள்ள இந்த நிதி மோசடி விவகாரம், திரைத்துறை மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி லண்டன் மென்பொருள் பொறியாளரிடம் 9.35 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், பிரபல நடிகை அஷூ ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாகத் திட்டமிட்டுப் பணம், நகை மற்றும் சொத்துக்களைப் பறித்த நடிகை, இறுதியில் அந்த இளைஞரையே மிரட்டிய திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தின் பின்னணி கடந்த 2018ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. லண்டனில் கைநிறையச் சம்பளத்தில் பணியாற்றி வருபவர் அந்த சாப்ட்வேர் என்ஜினியர்..

London engineer complaint Ashu Reddy allegation 9 35 crore fraud case marriage promise case India Hyderabad police probe 9 35

ஒருமுறை இந்தியா வந்திருந்தபோது, நண்பர்கள் மூலமாக நடிகை அஷூ ரெட்டியை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின்போது, தான் ஒரு வளர்ந்து வரும் நடிகை என்றும், அமெரிக்காவில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளதாகவும் அஷூ ரெட்டி அறிமுகமாகியுள்ளார்.

நடிகையின் மீது லண்டன் நபர் காதல்

இவர்களின் நட்பு உருவான வெறும் 2 மாதங்களிலேயே, அதாவது மார்ச் 2018ல், அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அஷூ ரெட்டி வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், சாப்ட்வேர் என்ஜினியரான அந்த லண்டன் மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்தும் ஆகியிருந்தது..

உடனே நடிகையும், பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிடுமாறும், நம்முடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும் என்றும் மிகவும் நம்பிக்கையூட்டி உள்ளார்.. இதனை உண்மை என்று நம்பிய அந்தப் பொறியாளர், அஷூ ரெட்டியுடன் நெருக்கமான உறவைத் தொடர்ந்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நடிகை அஷூ ரெட்டி பல்வேறு காரணங்களை கூறி அந்த பொறியாளரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்றுள்ளார். நடிகையின் தொடர் வற்புறுத்தல் மற்றும் நெருக்கடி காரணமாகவே சொத்துக்கள், சொகுசு வாகனங்கள் மற்றும் விலையுயர்ந்த தங்க நகைகள் என ஏகப்பட்ட சொத்துக்களை அந்தப் பொறியாளர் வாங்கித் தந்துள்ளார்.

9.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து

தன் வருங்கால மனைவி என்ற நம்பிக்கையில், சுமார் 9.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் பணத்தையும் அஷூ ரெட்டிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் லண்டன் மாப்பிள்ளை வாரி வழங்கியுள்ளார்... ஆனால் நடிகையோ கல்யாண பேச்சையே எடுப்பதில்லையாம்.. எப்போது கல்யாணம் பற்றி பேசினாலும் அஷூ ரெட்டி மழுப்பலாகப் பதிலளித்து வந்துள்ளார்.

அஷூ ரெட்டியின் போக்கு முற்றிலும் மாற்றம்

கடந்த 2025ம் ஆண்டு முதல் அஷூ ரெட்டியின் போக்கு முற்றிலும் மாறியுள்ளது. தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தினால் உங்கள் மீது பொய்யான வழக்குகள் போட்டுவிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டாராம்.. அத்துடன் அந்தப் பொறியாளருடன் பேசுவதையும் முற்றிலும் நிறுத்திவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான லண்டன் பொறியாளர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நிலைகுலைந்து போனார்.

இதற்கு பிறகுதான் போலீஸ் வரை செல்ல முடிவெடுத்தார்.. திருமண ஆசை காட்டி ஏமாற்றியதால் தனது மகன் ரூ. 9.35 கோடி என்ற மிகப்பெரிய நிதி இழப்பையும், மிகக்கடுமையான மன அழுத்தத்தையும் சந்தித்து வருவதாக அவரது தந்தை புகாரில் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி என்ன?

இப்போது இந்தப் புகாரின் அடிப்படையில், நடிகை அஷூ ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் மீது ஐதராபாத் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணம் என்ற புனிதமான பந்தத்தை பயன்படுத்தி, ஒரு மென்பொருள் பொறியாளரின் உழைப்பைச் சுரண்டிய இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

நடிகை அஷூ ரெட்டியிடம் இதுகுறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+