வீட்டு கேஸ் சிலிண்டர்.. பட்டென விலையை குறைத்த சந்திரசேகர்.. "அந்த பயம் இருக்கட்டும்".. கவனித்த காங்.,
ஹைதராபாத்: தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடக்க போகிறது.. இந்த தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதியும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன.. இந்த 2 கட்சிக்கும்தான் பயங்கரமான போட்டி உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதில், இந்த முறை காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இது தற்போதைய ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதிக்கு கடும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அதனால், மக்களை வெகுவாக கவரும் வகையில், தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் வெளியிட்டிருக்கிறார்.
கேஸ் சிலிண்டர்: என்னென்ன வாக்குறுதியை தந்தால், மக்களை கவர முடியும் என்பதை அறிந்தே இந்த வாக்குறுதி தயாரானதாக காங்கிரஸ் விமர்சிக்க துவங்கி உள்ளது.. காரணம், ரூ.400க்கு கேஸ் சிலிண்டரை வழங்க போவதாக சொல்லி உள்ளார் சந்திரசேகர ராவ்..
செய்தியாளர்களிடம் ராவ் பேசியபோது, "பாரத ராஷ்டிர சமிதி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், மிச்ச தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும்... வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை மாநில அரசு செலுத்திவிடும்.
பயனாளிகள்: ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்... சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்... ஆனால், முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக உயர்த்தப்படும்.
பழைய ஓய்வூதியக் கொள்கையை மீட்டெடுக்க அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.. ஆதரவற்ற குழந்தைகளுக்காக சிறப்புக் கொள்கை கொண்டு வரப்படும் என்றும் கட்சி உறுதியளித்தது... ரேஷன் கடைகள் மூலம் பிபிஎல் குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்படும்.. வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டு மனைகள் வழங்கப்படும்.
வீட்டு மனை: ஆட்சிக்கு வந்ததும் மேலும் ஒரு லட்சம் பேருக்கு 2 படுக்கை அறை கொண்ட இலவச வீடு வழங்கப்படும். வீட்டு மனை உள்ளவர்களுக்கு வீடுகட்டி கொள்ள ரூ. 5 லட்சம் இலவசமாக வழங்கப்படும். அனாதை குழந்தைகளை அரசே தத்து எடுத்து அவர்களை உயர் கல்வி வரை இலவசமாக படிக்க வைக்க உள்ளது. எனவே, இனி அவர்களை அனாதை குழந்தைகள் என்று சொல்ல முடியாதபடி, அரசு குழந்தைகள் என்று அழைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் இப்போது, ரூ.4016-ல் இருந்து, 5 வருடங்களில் ரூ.6016 ஆக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.. நிச்சயமாக மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.. அப்படி ஆட்சிக்கு வந்ததுமே 6 முதல் 7 மாதங்களிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்" என்றார்.
வாக்கு சதவீதம்: சமீபத்தில் லோக் போல் நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 56 முதல் 60 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது..
அதாவது, பாஜக 25 முதல் 29 இடங்களிலும், பிஎஸ்பி 1 அல்லது 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறலாம் என்று கணித்து கூறியிருந்தது. இதேபோல, தெலுங்கானாவில், அதிகபட்சம் 44 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டிருந்தது.
குறிப்பாக, காங்கிரஸ் 61 முதல் 67 இடங்களிலும், பிஆர்எஸ் கட்சி 45 முதல் 51 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 6 முதல் 8 இடங்களிலும், பாஜக 2 அல்லது 3 இடங்களிலும், இதர வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம் என்று கூறியிருந்தது.
என்னாகும்: இந்த கணிப்புகள்தான், தெலுங்கானாவின் ஆளும் கட்சிக்கு தூக்கி வாரிப்போட்டிருக்கிறது. எனவே, வாக்காளர்களை கவரும் விதத்தில், இந்த தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. வாக்குறுதிகளில் மக்கள் வீழ்வார்களா? அல்லது வெல்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications