செம ட்விஸ்ட்.. டிரைவரே இல்லாமல் நடுரோட்டில் ஓடிய பஸ்.. எகிறி குதித்து ஓடிய கண்டக்டர்.. அலறிய ஆந்திரா
பிரேக் பிடித்து பஸ்ஸை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்து நிறுத்தினார் கண்டக்டர்
ஹைதராபாத்: டிட்டோ சினிமாவில் நடப்பது போலவே ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்து, புல்லரிக்க வைத்துவிட்டது.. அந்த சம்பவத்தின் இறுதியில், பல உயிர்களும் காப்பாற்றப்பட்டு விட்டன.
எத்தனையோவிதமான பஸ் பயண அனுபவங்கள் பொதுமக்களுக்கு ஏற்படுவது வழக்கம்.. பெரும்பாலும், அரசு பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே சில டிரைவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுவிடும்.
அந்த சமயத்தில், பயணிகள் பீதியடைந்தாலும், அந்த வலியிலும் டிரைவர்கள் பஸ்ஸை ஓரங்கட்டிவிட்டு, பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட நிகழ்வுகள் பல உண்டு..

புல்லரித்தது
சில சமயம், வண்டியில் திடீரென பிரேக் இல்லாவிட்டாலும் முன்கூட்டியே சமயோஜிதமாக செயல்பட்டு விபத்துக்களை தவிர்ப்பதும் உண்டு.. ஆனால், கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் பஸ் தறிகெட்டு போகும்போதுதான், விபத்துக்களை சந்திக்க வேண்டி வந்துவிடுகிறது.. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடும் சோகங்களும் நடந்து விடுகின்றன.. ஆனால், ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்து, மொத்த பேருக்கும் புல்லரிக்க வைத்து விட்டது.

எகிறி குதித்தார்
ஆந்திராவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.. சாலைகளில் எல்லாம் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.. இதனால், சாலைகள் மேலும் குண்டும் குழியுமாக உள்ளன.. இந்நிலையில், பொட்டி ஸ்ரீ ராமுலு மாவட்டம் காவனி பட்டினத்தில் இருந்து, நெல்லூர் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது... அப்போது எதிரே வேகமாக கார் ஒன்று வந்துள்ளது.. ஆனால், குண்டும் குழியுமாக உள்ள சாலையில் அந்த கார் இறங்கிவிட்டதால், கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்து கொண்டிருந்த அரசு பஸ்ஸில் மீது மோதி கவிழ்ந்தது...

தொப்பென்று விழுந்தார்
கார் வேகமாக வந்து பஸ் மீது மோதியதால், பஸ் ஓட்டி வந்த டிரைவர் நிலைகுலைந்து, தன் சீட்டிலிருந்து எகிறி நடுரோட்டில் தொப்பென விழுந்தார்.. டிரைவர் சீட்டில் டிரைவரே இல்லாமல் பஸ் தாறுமாறாக ஓடியது... கிட்டத்தட்ட 150 மீட்டர் தூரத்துக்கு டிரைவர் இல்லாமலேயே பஸ் ஓடியது.. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்... காப்பாத்துங்க.. காப்பாத்துங்க என்று உயிரை கையில் பிடித்து கொண்டு கத்தினார்கள்.. உடனே, அந்த பஸ் கண்டக்டர், வேகமாக ஓடிச்சென்று, டிரைவர் சீட்டில் உட்கார்ந்து பிரேக் பிடித்து, பஸ்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார்... அப்போதுதான், பயணிகளுக்கு உயிரே வந்தது..

திரில்லிங்
இந்த விபத்து குறித்து, உடனடியாக காவனி பட்டினம் போலீசாருக்கு தகவல் சொல்லப்படவும், அவர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்த டிரைவரையும், விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... கண்டக்டர் மட்டும் பஸ்ஸை நிறுத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்து இருக்கும்... கண்டக்டர் பாய்ந்து சென்று, டிரைவர் சீட்டில் உட்கார்ந்து பிரேக் போட்டதை பார்த்தால், ஏதோ சினிமா பார்ப்பது போலவே இருந்தது என்கிறார்கள் பயணிகள்.. பிறகு, கண்டக்டருக்கு பயணிகள் நன்றி சொல்லி பாராட்டைத் தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications