எறும்புக்கு பயந்து 25 வயது பெண் தற்கொலை.. உருக்கமான கடிதம்.. தவிக்கும் 3 வயது மகள் - கணவர்
ஹைதராபாத்: தெலுங்கானாவை சேர்ந்த 25 வயது பெண் எறும்புக்கு பயந்து தனது 3 வயது மகள் மற்றும் கணவரை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளளார். முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் அனைவரையும் கல்ஙக வைத்துள்ளது.
தெலுங்கனா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமீன்புரியில் உள்ள நவ்யா ஹோம்ஸ் காலனியில் வசித்து வந்தவர் மணிஷா. இவருக்கு வயது 25. திருமணமாகி கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் 3 வயதில் அன்விகா என்ற மகள் உள்ளனர்.

இந்நிலையில் தான் மணிஷா விசித்திரமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தது. இவர் மைர்மெகோபோபியா-வால் (Myrmecophobia) பாதிப்பு இருந்தது. மைர்மெகோபோபியா என்பது எறும்புக்கு பயப்படுவதை குறிக்கும். ஆம் மணிஷாவுக்கு, எறும்பை கண்டாலே பயம் வந்துவிடுமாம்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஸ்ரீகாந்த் காலையில் வேலைக்கு சென்றார். வீட்டில் மணிஷா, தனது 3 வயது மகளுடன் இருந்தார். மாலையில் வேலை முடிந்து கணவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை திறக்கும்படி அவர் தட்டினார். ஆனால் மணிஷா கதவை திறக்கவில்லை.
இதனால் ஸ்ரீகாந்த் சந்தேகம் அடைந்தார். நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததோடு, மணிஷா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் ஸ்ரீகாந்த் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மணிஷா தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது சேலையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. மணிஷாவின் உடலை பார்த்து ஸ்ரீகாந்த் கதறி அழுதார்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மணிஷாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே தான் அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் மணிஷா தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில், ‛‛என்னை மன்னித்து விடுங்கள். எல்லா முன்னெச்சரிக்கை பணிகளையும் செய்யுங்கள். அன்னவாரம் மற்றும் திருப்பதி உண்டியலில் ரூ.1,116 டெபாசிட் செய்யுங்கள். எல்லம்மாவுக்கு அரிசி கொடுப்பதை மறந்து விட வேண்டாம். எறும்புக்கு பயந்து என்னால் நீண்டகாலம் வாழ முடியாது. குழந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.
அமீன்புர் சர்க்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேஷ் கூறுகையில், ‛‛மணிஷா சிறு வயதில் இருந்தே எறும்புக்கு பயந்து வந்துள்ளார். டாக்டரை சந்தித்து கவுன்சிலிங் பெற்றுள்ளனர். ஆனாலும் அவருக்கு எறும்பு மீதான பயம் போகவில்லை. அவர் தற்போது உயிரை மாய்த்துள்ளார். விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிஷா தற்கொலைக்கு காரணமான பிரச்சனையை ஆங்கிலத்தில் மைர்மெகோபோபியா (Myrmecophobia) என்று சொல்வார்கள். இந்த பாதிப்பு உலகம் முழுவதும் வெகு சிலருக்கு உள்ளது. இவர்களுக்கு எறும்புகளை பார்த்தாலே பயம் தொற்றிக்கொள்ளும். மேலும் எறும்பின் புகைப்படம், எறும்பை பற்றி நினைத்தாலே அவர்களுக்கு அச்ச உணர்வு ஏற்படும்.
இதனால் அவர்களின் இதயம் வேகமாக துடிக்கும். உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். உடல் நடுக்கம் ஏற்படும். மனதளவில் பெரும் அச்சுறுத்தலை சந்திப்பார்கள் எறும்புகள் குறித்த அதிகப்படியான எதிர்மறை சிந்தனைகள் தான் இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.
இத்தகைய மைர்மெகோபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எளிதில் மீட்கலாம். தொடர்ச்சியான கவுன்சிலிங் கொடுப்பதன் மூலமாக அவர்களை படிப்படியாக மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications