மன்னிப்பு கேட்ட கார்த்தி.. மனம் குளிர்ந்த பவன் கல்யாண்.. மனதார பாராட்டுவதாக உருக்கமான அறிக்கை
ஹைதராபாத்: நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டதற்கு, நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார். தற்செயலாக நடந்த விவகாரம் என்பதை தான் புரிந்து கொண்டேன் என்றும், திருப்பதி மற்றும் லட்டு விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வு பூர்வமான ஒன்று என்றும் , எனவே இதுபோன்ற விஷயங்களை நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள மெய்யழகன் படம், தமிழ்,தெலுங்கில் வெளியாகிறது. இந்த படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. அப்போது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கிய பெண் தொகுப்பாளர், லட்டு குறித்து மீம்ஸ் காட்டி (கண்ணா லட்டு திண்ண ஆசையா என்று கார்த்தி கேட்பாரா, அதை குறிப்பிடும் வகையில்) கார்த்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கார்த்தி பதில் அளிக்க நாசுக்காக முதலில் மறுத்தார். எனினும், மீண்டும் மீண்டும் ஆங்கர் கேட்டதால், இது சென்செட்டிவ்வான விவகாரம், அதுபற்றி நாம் பேச வேண்டாம் என்று கூறி சிரித்தபடி மழுப்பினார். அப்போது அங்கு சிரிப்பலை எழுந்தது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்,"சினிமா நிகழ்வில் லட்டு குறித்தது கிண்டல் செய்வீர்களா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்கள். திருப்பதி லட்டு விவகாரத்தில் சென்செட்டிவ் விவகாரம் என்று எப்படி கூறலாம்.. நடிகர்கள் என்பதற்காக தான் மரியாதை கொடுப்பதாகவும், ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறு முறை யோசித்து பேச வேண்டும் என்றும் நடிகர் கார்த்தியை மறைமுகமாக விமர்சித்தார்.
இதையடுத்து உடனடியாக தான் பேசியதற்காக நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். . நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்" என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தியை மனதார பாராட்டுவதாக நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கூறியுள்ளார். நடிகர் பவன் கல்யாண் இதுபற்றி வெளியிட்ட பதிவில், "உங்களுடைய நடவடிக்கையையும், விரைவான பதிலையும், நாங்கள் பகிர்ந்த விஷயங்களுக்கு நீங்கள் காட்டிய மரியாதையையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். திருப்பதி மற்றும் போற்றுதலுக்குரிய லட்டுகள் போன்ற நமது புனிதமான விஷயங்கள் என்பது கோடிக்கணக்கான பக்தர்களுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானவை ஆகும். எனவே இதுபோன்ற விஷயங்களை பற்றி கேள்விகளின் போது நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம் ஆகும்.
நான் இந்த விவகாரத்தில், எந்த உள்நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். மேலும் நடந்த சம்பவம் தற்செயலாக இருந்தது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். பொதுவானவர்களாகிய நம்முடைய பொறுப்பு என்பது, மக்களிடையே ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பதாகும். குறிப்பாக நாம் மிகவும் மதிக்கும் நம்முடைய கலாச்சாரம் மற்றும் ஆன்மீக விஷயஙகளில் ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்க்க வேண்டும். சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இதனை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்.
அர்ப்பணிப்பும் திறமையும் தொடர்ந்து நம் சினிமாவை மேம்படுத்து வரும் முக்கியமான நடிகரான (கார்த்தி) உங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சூர்யா, ஜோதிகா, மற்றும் ஒட்டுமொத்த குழுவின் மெய்யழகன் / சத்தியம் சுந்தரம் (தெலுங்கு) படங்கள் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களை மகிழ வைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" இவ்வாறு நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் கூறியுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications