Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவறு உங்கள் மீது இல்லை.. ஒரே குரலில் கார்த்தியை ஆதரிக்கும் பவன் கல்யாண் ரசிகர்கள்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருப்பதி லட்டு குறித்து மெய்யழகன் திரைப்பட புரோமோசன் நிகழ்ச்சியில் ஆங்கர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நடிகர் கார்த்தி, சென்செட்டிவ்வான விவகாரம் எனறு கூறினார். இதை கண்டு கோபம் அடைந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், கடுமையாக விமர்சித்தார். இதனால் உடனே நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டார். இதையடுத்து பவன் ரசிகர்கள் கார்த்தியை பாராட்டியதுடன், உங்கள் மீது தவறு இல்லை என்று கூறி வருகிறார்கள்.

திருப்பதி லட்டு விவகாரம் மொத்த ஆந்திராவிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மக்களின் உணர்வுபூர்வமான இடமாக திருப்பதி இருப்பதால், அந்த லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறினாலும், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் தான், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் விமர்சித்த வருகின்றன.

tirupati pawan kalyan actor karthi

இந்த விவகாரத்தில் முதல்வர் சந்திபாபு நாயுடு குற்றச்சாட்டு கூறியதுடன் விட்டுவிட்டார். ஆனால் துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த விவகாரம் தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்துவிட்டதாக கூறி வருகிறார்.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக முதல்முறையாக பவன் கல்யாண் வெளியிட்ட பதிவில்,. இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதாவது "சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்" என்ற ஒன்றை நாம் உடனடியாக துவங்க வேண்டும். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இரண்டாவது முறையாக வெளியிட்ட பதிவில், "நம்முடைய கலாச்சாரம், நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றின் மையமான ஸ்ரீ திருப்பதி பாலாஜி தாமின் பிரசாதத்தில் அசுத்தத்தை புகுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீய முயற்சிகளால் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதென்றால், நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். வெங்கடேஸ்வரப் பெருமாள் கடவுளின் அருளால் நமக்கும், சனாதனிகள் அனைவருக்கும் இந்த துக்கமான தருணத்தில் நல்ல மன வலிமை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இப்பொழுதே இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, பதினோரு நாட்கள் நோன்பு நோற்பதாக சபதம் எடுத்து வருகிறேன். பதினோரு நாள் பரிகார தீட்சையின் பிற்பகுதியில் அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி இறைவன் முன் எனது பரிகார தீட்சை நிறைவு செய்ய போகிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் திருப்பதி லட்டு விவாகரம் தொடர்பாக சர்ச்சை ஆந்திராவில் நீடித்து வரும் நிலையில், நடிகர் கார்த்தி ஹைதராபாத்தில் நடந்த 'மெய்யழகன்' படத்தின் விழாவில் பங்கேற்றார். அப்போது ஆங்கராக இருந்த பெண், கார்த்தியிடம் லட்டு தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு கார்த்தி, இப்போது இது சென்சிடிவ்வான விவாகரம் என்று கூறி கருத்து கூற மறுத்தார். இப்போது லட்டு குறித்து நாம் பேச வேண்டாம் என்றார். இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது துணை முதல்வர் பவன் கல்யாண் கோபம் அடைந்து பேசினார். லட்டு சென்சிடிவ்வான விஷயம் என்று கூற வேண்டாம்.. சனாதன தர்மம் குறித்து பேசுவதற்கு முன்பு 100 முறை யோசியுங்கள் என்று காட்டமாக கூறினார்.

இதனால் உடனடியாக மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி , பவன் கல்யாண் சார் உங்கள் மீது மிகுந்த மதிப்பு மரியாதையும் வைத்துள்ளேன். எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை கடைபிடிக்கிறேன். நன்றி" என்று கூறியிருந்தார். நடிகர் பவன் கல்யாணிடம் கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டதால், அவரை பவன் கல்யாண் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் கார்த்தி பேச்சில் எந்த தவறும் இல்லை என்றும், ஆங்கர் மீது தான் தவறு என்றும் கூறி வருகிறார்கள்.

நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இது உங்கள் தவறு அல்ல, நீங்கள் அதை நன்றாக கையாண்டீங்க. நேற்றைய நிகழ்ச்சியில் லட்டு குறித்து கேலியாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்ட போது, நீங்கள் மரியாதையுடன் பேச மறுத்த பிறகும், அந்த உரையாடலை நீட்டித்த ஆங்கர் மீது தான் பிரச்சினை உள்ளது" என்றார்.

இன்னொரு நெட்டிசன் கூறுகையில், கார்த்தி நீங்கள் அங்கு எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் மறுபக்கம் தவறுகள் உள்ளது., நீங்கள் தெலுங்கு மக்களையும் கலாச்சாரத்தையும் எவ்வளவு மதிக்கிறீர்கள் என்பது கல்யாண் சாருக்கே தெரியும். தெலுங்கு திரையுலக பிரியர்களான நாங்கள் உங்களை நேசிக்கிறோம் கார்த்தி என்று கூறியுள்ளார்.

மூன்றாவது நெட்டிசன் கூறுகையில்,கார்த்தி அவர்களே இது உங்கள் தவறல்ல... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தொகுப்பாளர்களும் வேண்டுமென்றே அந்த தலைப்பை மட்டும் கேட்டார்கள். ஆனாலும் நீங்கள் புத்திசாலித்தனமாக பதிலளித்தீர்கள், எனவே இதில் உங்கள் தவறு இல்லை என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+