பென்சிலை திருடிட்டான் சார்.. கேஸ் போடுங்க.. போலீசாரையே மிரள வைத்த 1-ம் வகுப்பு மாணவன்.. செம வீடியோ
பென்சில் திருடியவன் மீது போலீசில் புகார் தர சென்றுள்ளான் சிறுவன்
ஹைதராபாத்: "சார்.. இவன் என் பென்சிலை திருடிட்டான், கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்க" என்று 7 வயது சிறுவன் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
காலையில் இருந்தே ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த சிறுவன் பெயர் ஹனுமந்த்.. 7 வயதுதான் ஆகிறது.. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரில் வசித்து வருகிறான்.. அருகில் உள்ள ஸ்கூலில் 1-ம் கிளாஸ் படித்து வருகிறான்..
இவன்தான் திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்திருக்கிறான்.. தன்னுடன் சக மாணவர்களையும் அழைத்து கொண்டு சென்றள்ளான்.. கும்பலாக குழந்தைகள் கூட்டம் வருவதை பார்த்து அங்கிருந்த போலீஸ்காரர்களுக்கே ஷாக் ஆகி விட்டது.

புகார்
என்ன விஷயம், எல்லாரும் வந்திருக்கீங்களே என்று கேட்டதற்கு, அந்த சிறுவன் ஒரு புகாருடன் வந்துள்ளதை அறிந்து மேலும் அதிர்ந்து போய்விட்டனர் போலீசார்.. "சார்.. இவன் என்னுடைய பென்சிலை டப்பாவோடு திருடி விட்டான்" என்று புகார் தந்துள்ளான் ஹனுமந்த்... இதை கேட்ட போலீசாருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் ஒருநிமிஷம் திணறிவிட்டனர்.. ஆச்சரியம் அடைந்த போலீசார், அச்சிறுவர்களுக்குள் கைகளை குலுக்கி சமாதானம் செய்ய போனார்கள்..

ஜாமீன்
ஆனால் ஹனுமந்த் விடவில்லை.. "பென்சிலை திருடியவன் மீது கேஸ் போடணும்" என்று அடம்பிடிக்க ஆரம்பித்துள்ளான்.. அதற்கு போலீசார், "கேஸ் போட்டால் கோர்ட், ஜாமீன் என்று உன் வீட்டில் பெற்றோர் அலைய நேரிடுமே.. வேண்டுமானால், பென்சில் திருடிய பையனின் பெற்றோர்களிடம் இதைபற்றி பேசுகிறோம்" என்று சமாதானம் செய்தனர்.. பிறகு, திருடிய பென்சில் எங்கே, காட்டுங்கள் என்று கேட்டனர்.

திருட்டு
உடனே ஹனுமந்த், ஒன்றரை அங்குலம் நீளமுள்ள ஒரு குட்டி பென்சிலை எடுத்து போலீசாரிடம் காட்டி, இதைதான் சார் அவன் திருடிவிட்டான் என்றான்.. அந்த பென்சில் சைஸை பார்த்ததுமே போலீசாருக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது.. 1ம் வகுப்பு மாணவன், சக மாணவன் பென்சிலை திருடிவிட்டதாக சொல்லி போலீசாரிடம் புகாரளித்து அவன் மீது கேஸ் போடுமாறு முறையிட்ட இந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.
Too cute. These tiny guys went to police as one of them wanted to file a complaint on the other for stealing his ‘pencil.’ ‘File a case, he stole my pencil,’ he says. Cops had to counsel him saying ‘bail’ would be an issue 🤣. Incident from #AndhraPradesh’s #Kurnool’s village. pic.twitter.com/obMuYfG8BG
— Rishika Sadam (@RishikaSadam) November 25, 2021
வைரல் வீடியோ
அந்த வீடியோவில் சிறுவர்கள் அத்தனை பேரும் கைகளை கட்டி போலீசாரிடம் பேசுகிறார்கள்.. அதிலும் ஹனுமந்தின் மழலை பேச்சு, இணையவாசிகளின் மனதை அள்ளுகிறது.. இறுதியில் புகார் கொடுத்தவனையும், பென்சில் திருடியவனையும் ஒன்றாக கைகுலுக்க செய்ய போலீசார் எடுத்துள்ள முயற்சி காண்போரை நெகிழ வைத்துள்ளது.. ஆயிரம் இன்பங்கள் உலகில் கொட்டிக்கிடந்தாலும், மழலையின் பேச்சுக்கு ஈடு இணையே கிடையாதுதான்..!












Click it and Unblock the Notifications