1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்!
ஹைதராபாத்: மத்திய கிழக்கு போர் இந்தியாவில் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவுக்கு நேரடியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றாலும் மக்கள் அச்சப்பட்டு அதிகளவு பெட்ரோலை வாங்குவது செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இதனால் பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு நிலவும் கள நிலவரத்தை நாம் பார்க்கலாம்!
மத்திய கிழக்கு பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றுமே மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது.

ஹைதராபாத்
ஆனாலும் சில இடங்களில் நிலைமை மோசமாகவே இருக்கிறது. குறிப்பாகத் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாகவே எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. அதிலும் நேற்று நகரின் பல முக்கிய பகுதிகளில் பெட்ரோல் நிரப்பவே முடியாத சூழலே இருந்தது.
பெட்ரோல் பங்குகள்
நாம் ஹைதராபாத்தில் இரவு 9.30 மணிக்கு பெட்ரோல் நிரப்பலாம் எனச் சென்றோம். இருப்பினும், பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடியே இருந்தன. 24 மணி நேரமும் இயங்கும் பெட்ரோல் பங்குகள் கூட மூடப்பட்டன. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. நாம் 4, 5 கிமீ வரை சென்று எதாவது ஒரு பெட்ரோல் பங்கில் ஆவது பெட்ரோல் இருக்குமா எனப் பார்த்தோம். ஆனால், எல்லா பங்கும் மூடப்பட்டே இருந்தது.
கடைசியாக ஒரே ஒரு பெட்ரோல் பங்க் திறந்து இருந்தது. அந்த பெட்ரோல் பங்கிற்கு போனாலும் அங்கு ஏகப்பட்ட வாகனங்கள் வரிசையில் நின்றன. சினிமா தியேட்டர்களில், ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கும் அளவுக்குக் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சரி, நின்று தான் பார்ப்போம் என நாம் வரிசையில் நின்றோம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஆனது. அதன் பிறகு கூட்டம் நகரவே இல்லை. அப்படியே நின்றுவிட்டது.
பெட்ரோல் இல்லை
என்னவென்று கேட்டால் அங்கும் பெட்ரோல் காலி! உள்ளே பார்க்கும்போது பலரும் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஒரு லிட்டர் பெட்ரோலாவது கொடுங்கள் எனக் கோரிக்கை விடுத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், கையிருப்பிலேயே பெட்ரோல் இல்லாததால் பங்க் ஊழியர்கள் தங்கள் நிலைமை எடுத்துரைத்தனர். நகரில் பெரும்பாலான இடங்களிலே இதுவே சூழலாக இருக்கிறது.
வரும் காலங்களில் எங்கு நிலைமை மோசமாகுமோ என அஞ்சுகிறார்கள். ஆனால், அதிகாரிகளோ வேறு விதமாகச் சொல்கிறார்கள். பெட்ரோல், டீசலுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லையாம். சப்ளை வழக்கம் போலவே இருக்கிறதாம். பிறகு ஏன் கூட்டம் என்ற சந்தேகம் வரலாம்.. மக்கள் அனைவரும் பெட்ரோல் கிடைக்காதோ என நினைத்து டேங்கை பில் செய்கிறார்கள். கண்டெய்னர்களில் எல்லாம் வாங்கி சொல்கிறார்கள். இதுவே பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.
என்ன சிக்கல்
வழக்கமாக ஒரு லிட்டர், 2 லிட்டர் போடுபவர்களும் கூட டேங்க்கை பில் செய்கிறார்கள். இதனால் தேவை அதிகரிக்கிறது.. செயற்கைத் தட்டுப்பாடு உருவாகிறது.. அதாவது வழக்கமாக நள்ளிரவு வரை வரும் பெட்ரோல், அனைவரும் புல் டேங்க் போடுவதால் பிற்பகலிலேயே காலியாகிறது. இரவு தான் பெட்ரோல் லாரி வருவதால் இடைப்பட்ட நேரம் பெட்ரோல் பங்க் மூடப்படுகிறது. ஒரு பங்க் இதுபோல மூடப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இன்னும் பலர் திறந்திருக்கும் பங்குகளில் டேங்க்கை புல் செய்கிறார்கள். இந்த சங்கிலி தொடர் நிகழ்வே பெரிய பிரச்சினையாக மாறுகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து விநியோகச் சங்கிலி முழுமையாகச் செயல்படுவதாகவும், அனைத்து மாவட்டங்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இருப்பு இருப்பதாகவும் இங்குள்ள அரசுத் துறை விளக்கம் அளித்துள்ளது. மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும் தேவையில்லாமல் வாங்கி வைக்க வேண்டாம் என்றும் தெலங்கானா பெட்ரோலிய டீலர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.
டீலர்கள் உறுதி
இது தொடர்பாக டீலர் சங்கத்தினர் கூறுகையில், "வழக்கமான விற்பனையைக் காட்டிலும் இந்த வாரம் விற்பனை 2.5 முதல் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல விற்பனை நிலையங்களில் தற்காலிகமாக எரிபொருள் இருப்பு குறைந்துள்ளது. ஆனால், தட்டுப்பாடு எதுவும் இல்லை. போதிய கையிருப்பு இருக்கிறது. விநியோக சங்கிலியும் பிரச்சினை இல்லை. தேவையில்லாமல் அதிகப்படியாக வாங்குவதை மக்கள் தவிர்த்தாலே போதும்" என்கிறார்கள்.
-
மே 15க்கு பிறகு இந்தியாவுக்கு பெரும் ஆபத்து.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
டிரம்ப்-ஐ கலாய்க்கும் ஈரான் தலைவர்.. அமெரிக்க மக்களை வெறுப்பேத்திய போட்டோ.. என்ஜாய் பண்ணுங்க! -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு











Click it and Unblock the Notifications