ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை வருவதற்கு சில மணி நேரம் முன்... குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

ஐதராபாத்: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, சில மணி நேரத்துக்கு முன் குடும்ப அரசியல் குறித்து ஐதராபாத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தடைந்தார்.

அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்பு கட்டிவைத்து 3 கிமீ ஓட்டி சென்ற டிரைவர்... பதறவைக்கும் வீடியோ அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்பு கட்டிவைத்து 3 கிமீ ஓட்டி சென்ற டிரைவர்... பதறவைக்கும் வீடியோ

Recommended Video

    PM Modi Chennai Visit-க்கு கொடுத்து பிரமாண்ட வரவேற்பு #Politics

    பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

    சென்னையில் பிரதமருக்கு வரவேற்பு

    சென்னையில் பிரதமருக்கு வரவேற்பு

    சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

    தெலுங்கானா நிகழ்ச்சி

    தெலுங்கானா நிகழ்ச்சி

    பிரதமர் மோடி சென்னை வருவதற்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் சென்றார். அங்கு பாஜக தொண்டர்கள் முன்பாக பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவில் சிறிய சிறிய புதிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து இருக்கின்றன. அதிகளவிலான புதிய நிறுவனங்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3 வது இடத்தில் இருக்கிறது.

    குடும்ப அரசியல்

    குடும்ப அரசியல்


    குடும்ப அரசியல் கட்சிகள் ஊழல்மயமாகி இருக்கின்றன. அவை ஒரு குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன. இதை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. குடும்ப அரசியல் என்பது ஒரு அரசியல் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. மாறாக அது நமது ஜனநாயகம் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிரியாகும். ஒரே குடும்பத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாகவே ஊழல் இருக்கிறது. இதையும் நம் நாடு பார்த்துள்ளது.

    ஏழைகள் பற்றி கவலை இல்லை

    ஏழைகள் பற்றி கவலை இல்லை

    குடும்ப அரசியலால் நமது இளைஞர்களால் அரசியலுக்குள் நுழைய முடிவதில்லை. குடும்ப அரசியலை செய்து வரும் கட்சிகள் தங்களின் வளர்ச்சியை பற்றி மட்டுமே சிந்திக்கின்றார்கள். ஏழை மக்களை பற்றி கவலையே இல்லாத குடும்ப கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் குறித்து அவர்கள் நினைத்துப் பார்ப்பது இல்லை." என்றார்.

    English summary
    PM Narendra Modi open statement criticizing family politics before the entry of Tamilnadu:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X