கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் தற்கொலை! நள்ளிரவில் பரபரப்பு! என்ன நடந்தது?
ஹைதராபாத்: கார்த்திகா தீபம் உட்பட பல தெலுங்கு சீரியல்களில் நடித்த பிரபல நடிகர் சந்து தற்கொலையால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தெலுங்கு சின்ன திரைக்கு இது போதாத காலம் போல.. அங்கு அடுத்தடுத்து அதிர்ச்சி மரணங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

சமீபத்தில் தான் 'திரிநயனி' என்ற சீரியலில் நடித்து வந்த நடிகை பவித்திரா ஜெயராம் கார் விபத்தில் உயிரிழந்தார். இது தெலுங்கு சின்ன திரையில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது.
உயிரிழப்பு: இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில், மறைந்த பவித்ராவின் கணவர் சந்து என்பவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். அவரது இயற்பெயர் சந்திரகாந்த்.. இவர் திரிநயனி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இப்போது அவர் ராதாம்மா பெல்லி மற்றும் கார்த்திகா தீபம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான மணிகொண்டா அல்காபூர் காலனியில் உள்ள தனது வீட்டில் சந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி பவித்ரா ஜெயராமின் மரணத்தைத் தாங்க முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது: சாலை விபத்தில் பவித்ரா உயிரிழந்தது முதலே சந்து தனது சமூக வலைத்தளங்களில் சோகமான கருத்துகளையே பகிர்ந்து வந்தார். இந்தச் சூழலில் தான் அவர் இந்த மோசமான முடிவை எடுத்துள்ளார். இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் மரணம் அடைந்திருந்தார்.. விபத்து நடந்த போது பவித்ரியுடன் சந்துவும் காரில் இருந்துள்ளார். ஆனால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காயங்களிலிருந்து குணமடைந்த சந்து கார் விபத்து எப்படி நடந்தது என்பதை விளக்கினார். அதேபோல சமூக வலைத்தளங்களில் பவித்ரா குறித்தும் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
அப்பா காத்திருங்கள்: சந்து பிறந்தநாள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வந்தது.. அப்போது சந்து தனது பிறந்தநாளுக்காக பவித்ரா ஜெயராம் எடிட் செய்த பழைய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், அவர் "அப்பா எனக்காக இரண்டு நாட்கள் காத்திருங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யார் இவர்: ஷில்பா என்ற பெண்ணை சந்து கடந்த 2015இல் திருமணம் செய்து கொண்டு இருந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்தச் சூழலில் தான் கடந்த 6 ஆண்டுகளாக அவருக்கு பவித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் அவர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப் உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications