ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சக்ஸஸ்".. இஸ்ரோவின் PSLV-C54 ராக்கெட்.. 9 செயற்கை கோள்களுடன் விண்ணை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை ராக்கெட் விண்ணில் பாய்கிறது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் சார்பில் உருவாக்கப்பட்ட பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

விக்ரம் வரிசையில் 'விக்ரம்-எஸ்' என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட், 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இது மிகப்பெரிய சாதனையாகும்.. இந்த ராக்கெட்டை 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற புத்தொழில் நிறுவனம் ('ஸ்டார்ட்-அப்') வடிவமைத்திருந்தது.

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

 கவுன்டவுன்

கவுன்டவுன்

இந்த நிலையில் இஸ்ரோவானது, 'பி.எஸ்.எல்.வி.சி-54' என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது... இந்த ராக்கெட் 'ஓசன்சாட்03' என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்லக்கூடியதாகும்.. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், இன்று 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது...

 எரிபொருள்

எரிபொருள்

இந்த ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்தது. இது நாட்டின் மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 'கவுண்ட் டவுன்'ஆரம்பமாகி உள்ளது.. இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், மொத்தம் 4 நிலைகளை கொண்டது... ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது...

சவுண்ட்

சவுண்ட்

பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணியாகும்.. வானியல், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியலின் ஒத்த பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்வதற்காக விஞ்ஞான சமூகத்திற்கான சலுகை பெற்ற கருவிகளாக இந்திய ஒலிக்கும் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என்று ஏற்கனவே இஸ்ரோ அறிக்கை வெளியிட்டு கூறியிருந்தது.. இந்த ராக்கெட் வாயிலாக, இ.ஓ.எஸ்., - 6, ஐ.என்.எஸ் - 2பி, 'ஆனந்த், தைபோல்ட், அஸ்ட்ரோகாஸ்ட்' என்ற பெயரில் 9 செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது..

துல்லியம்

துல்லியம்

இந்த 9 செயற்கைகோள்களில் 5 இந்தியாவை சேர்ந்தது.. மீதி 4 அமெரிக்காவைச் சேர்ந்தது.. இந்தியா 2 செயற்கைக் கோள்களை, பூடான் நாட்டிற்காக செலுத்துகிறது... முக்கியமான செயற்கைக்கோளான இந்தியாவின் இ.ஓ.எஸ்., - 6, தலைமுறைக்கான புவியை கண்காணிக்கும் திறன் உடையது... அதாவது, கடல் மேற்பரப்பில் நிலவும் மாற்றம், கடலின் வெப்ப நிலை உள்ளிட்ட விபரங்களை மிக துல்லியமாக போட்டோ எடுத்து, கன்ட்ரோல் ரூமுக்கு இது அனுப்பும்... மற்ற 8 செயற்கைக்கோள்கள், 'நானோ' எனப்படும் சிறிய வகையை சேர்ந்தவை.

 லட்டு ஸ்வீட்

லட்டு ஸ்வீட்

இந்த ஆண்டில் 5-வது மற்றும் கடைசி முறையாக இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.. ராக்கெட்டின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.. இந்த நிகழ்வை காண, பெரும்பாலானோர் திரண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் குவிந்துள்ளனர்.. இன்றைய தினம் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதையொட்டி, நேற்றைய தினம் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட்டின் மாதிரியை திருப்பதி கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். விஞ்ஞானிகளுக்கு மேல தாளங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்கள் மற்றும் லட்டு ஆகியவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
PSLV c54 rocket of ISRO lauching from Sriharikota today at 11.56: 9 Satellites
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X