கடைசி நேரத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்த ஐஆர்சிடிசி.. நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஐதராபாத்: ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எந்த வித காரணமும் இன்றி டிக்கெட்டை ரத்து செய்த ரயில்வேக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் பயணி ஒருவர் தொடர்ந்த வழக்கில், ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண்டிகை காலத்தின் போது ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை எந்த வித காரணமும் இன்றி ரத்து ரயில்வே நிர்வாகம் ரத்து செய்ததாகவும் இதற்காக இழப்பீடு வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் பயணி ஒருவர் தொடர்ந்த வழக்கில், ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விவரம் வருமாறு:-

ஹவ்ரா விரைவு ரயில்: ஆந்திர மாநிலம் செகந்திரபாத்தில் இருந்து விஜயநகரத்திற்கு செல்வதற்காக ஹவ்ரா விரைவு ரயிலில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பயணிப்பதற்காக குர்ஷீத் பேகம் என்ற பெண் பயணி 4 டிக்கெட்டுகளை புக் செய்திருக்கிறார்.
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.6,471 கொடுத்து ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக டிக்கெட் புக் செய்த குஷித் பேகம், விஜயநகரம் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் ரயில் நிலையத்திற்கு சென்று ரயில்வே பிளாட்பார்மில் காத்திருந்துள்ளார்.
1 மணி நேரத்திற்கு முன்பு குறுஞ்செய்தி: ரயில் புறப்படுவதற்கு வெறும் 1 மணி நேரமே இருந்த போது ஐஆர்சிடிசியில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் டிக்கெட் கேன்சல் ஆனதாக கூறப்பட்டு இருந்தது. அதேபோல், ஆட்டோமேட்டிக் கால் மூலமும் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாக குஷித் பேகத்திற்கு ரயில்வே தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும், ரயில் ரத்து ஆனதற்கான காரணம் குறித்து எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. இதனால், ரயில்வே கஸ்டமர் கேர் எண்ணிலும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஆனால், ரயில்வே ரத்து ஆனதற்கான காரணம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு: சங்கராந்தி பண்டிகை என்பதால் ரயில், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அனைத்து பஸ்களிலும் டிக்கெட் புக்கிங் ஆனதால், சாதாரண பேருந்தில் தனது குடும்பத்தினருடன் குர்ஷித் பேகம் விஜநயகரம் சென்றுள்ளார். இதனால் கூடுதலாக ரூ.4,589 செலவு ஆகியுள்ளது.
இதற்கிடையே, உரிய காரணம் இன்றி கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்த ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் குஷித் பேகம் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ரயில்வே நிர்வாகம் தரப்பில் எந்த முறையான காரணமும் இன்றி டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டது.
ரூ.470 பிடித்தம்: இதனால், நானும் எனது குடும்பத்தினரும் கடும் சிரமத்திற்கு உள்ளானோம். டிக்கெட் கேன்சல் ஆனதற்காக ரூ.470 பிடித்தம் செய்யப்பட்டது" என்று கூறையிருந்தார். இந்த மனுவை நுகர்வோர் நீதிமன்றம் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, ஐஆர்சிடிசி தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.
ரூ.20 ஆயிரம் இழப்பீடு: விசாரணையில், பயணி செகந்திரபாத் ரயில் நிலையத்தில் காத்திருந்த போதுதான் ரயில் ரத்து ஆன தகவல் அவருக்கு ரயில்வே தரப்பில் இருந்து கிடைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே தரப்பில் இருந்து ரயில் ரத்து செய்யப்படதற்கான எந்த உரிய காரணமும் கொடுக்கப்படவில்லை.
இதனால், பயணி மற்றும் அவர் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஐஆர்சிடிசிக்கு உத்தரவிடப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications