ஆணிகளை மகளுக்கு அடித்து அமானுஷ்ய சடங்கு.. தெலுங்கானா ஹைவேஸில் ஆதார் கார்டுடன் யாரிந்த பெண்? ஒரே பரபர

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட கணவனை சரிவர கவனிக்காமல், கள்ளக்காதலில் இறங்கிவிட்டார் 2வது மனைவி கவிதா.. மகள்களுக்கு திருமணமான நிலையில், பெற்ற தாயின் கள்ளக்காதல் விவகாரமானது, மிகப்பெரிய அதிர்வலையை தெலுங்கானாவில் உண்டுபண்ணி வருகிறது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் மற்றும் சொந்த மகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Telangana Ritual of nailing daughter

இரண்டாவது திருமணம்

தெலுங்கானா மாநிலத்திலுள்ளது ஒடிதலா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் குமாரசாமி.. இவரது முதல் மனைவி இறந்துவிடவும், கவிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்..

இந்த தம்பதிக்கு வர்ஷினி, ஹன்சிகா என 2 மகள்கள் உள்ளனர். இதில், இளைய மகள் ஹன்சிகாவுக்கு திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகள் வர்ஷினி பெற்றோருடன் வசித்து வந்தார்.

பக்கவாதம் பாதிப்பு

58 வயதான குமாரசாமி, சமீபகாலமாகவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இதனால் வீட்டிலேயே தங்கியிருக்கிறார்.. இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. ராஜ்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை..

நாளுக்கு நாள் வளர்ந்த இந்த கள்ளக்காதல் விவகாரமானது, குமாரசாமிக்கு தெரியவந்துள்ளது.. எனவே மனைவியை கண்டித்துள்ளார். இது கவிதாவுக்கு எரிச்சலை தந்தது.. எனவே, கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இதற்காக கணவரை கொல்ல நாளும் குறித்தார்.. அதன்படி, கடந்த ஜூன் 25ம் தேதி, மகள் வர்ஷினி வீட்டில் இல்லாதபோது, கள்ளக்காதலன் ராஜ்குமாரை வீட்டிற்கு வரவழைத்து குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொன்றார் கவிதா..

Telangana Ritual of nailing daughter

பிறகு தன்னுடைய கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக நாடகமாடி, ஒப்பாரி வைத்தார்.. கணவரின் சடலத்தையும் அடக்கம் செய்து விட்டார்..

வர்ஷினிக்கு வந்த சந்தேகம்

ஆனால், தன்னுடைய அப்பாவின் மரணத்தில் வர்ஷினிக்கு சந்தேகம் எழுந்தது.. எனவே இதுகுறித்தும், ராஜ்குமார் வீட்டுக்கு வருவது குறித்தும், அம்மாவிடம் கேள்வி எழுப்பினார்... இதைக்கேட்டு நடுநடுங்கிப்போன கவிதா, தன்னுடைய கள்ளக்காதலுக்கு மகளும் இடையூறாக இருப்பதால், மகளையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதற்காக கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இரவு, தூங்கிக்கொண்டிருந்த வர்ஷினி கழுத்தை நெரித்து கொன்றார்கள் கவிதாவும், ராஜ்குமாரும்.. பிறகு மகளின் சடலத்தை மூட்டையில் கட்டி அருகிடிலிருந்த முட்புதரில் வீசிவிட்டார்கள்.. மறுநாள் காலையில், மகளைக் காணவில்லை என்று போலீசில் புகார் தந்து ஒப்பாரி வைத்தார் கவிதா.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் காணாமல் போன வர்ஷினியை தேட துவங்கினார்கள்.

ஆணிகளை அடித்து அமானுஷ்யம்

ஆனால் இதற்கு நடுவில், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, ராஜ்குமாரும், கவிதாவும், புதரில் வீசிய வர்ஷினியின் சடலத்தை வெளியே எடுத்தனர்.. சடலத்தை பைக்கில் வைத்து கட்டாரம் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்து சென்று போட்டனர்.. அந்த சடலத்துக்கு மஞ்சள், குங்குமம் தூவினார்கள்.. உடலை சுற்றியிலும் பூக்களை தூவினார்கள்.. பிறகு சாலையில் ஆணியை அடித்து, சடலத்தை வைத்து, சுற்றிலும் எலுமிச்சம் பழத்தை வெட்டி வீசி, காட்டில் கொண்டுபோய் போட்டுள்ளனர்.

பிறகு ஆதார் அட்டையையும் சடலம் அருகே போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.. அதாவது, ஆணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு செய்து வர்ஷினியை மர்மநபர்கள் கொலை செய்ததாக சித்தரிக்க முயன்றனர்.

ஆதார் அட்டை

மறுநாள் காலையில் நடுரோட்டில் கிடந்த சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறி ஓடினார்கள்.. அங்கிருந்த ஆதார் அட்டையின் அடிப்படையில் வர்ஷினியின் அம்மா, கவிதாவை போலீசார் அழைத்து விசாரித்தனர்..

தன் மகளை யாரோ கொன்றுவிட்டார்களே? என்று கதறி அழுது நாடகமாடினார் கவிதா.. ஆனால், போலீசாரின் கிடுக்கிபிப்பிடி விசாரணையில் கவிதாவின் டிராமா முடிவுக்கு வந்தது.. கள்ளக்காதலுக்காக, கணவர், மகளை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார்... இப்போது கள்ளக்காதல் ஜோடி இருவருமே ஜெயிலில் உள்ளனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+