அய்யய்யோ நீ என்னடா தப்பு பண்ணே? உன் கிரைம் ரேட் கூடுதுடா! சேவலை பிடித்து ஜெயிலில் போட்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் சேவல் ஒன்றை சிறையில் அடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் பூரெட்டிப்பள்ளி எனும் கிராமம் உள்ளது. இங்கு சிறுவன் ஒருவன் சேவலை கையில் எடுத்துச் சென்றான். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்தச் சிறுவன் சேவலை திருடிக் கொண்டு செல்வதாக போவதாக போலீஸில் புகார் அளித்தனர்.

rooster was put behind the bar in Telangana

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்துவதற்காக அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். சேவலையும் கொண்டு வருமாறு சொன்னதால் அவர் சேவலுடன் போய் நின்றுள்ளார்.

அந்த சிறுவன் 18 வயதை அடையாததால் பெற்றோரை அழைத்து அவர்களிடம் சிறுவனை போலீஸார் ஒப்படைத்தனர். அந்த நேரத்தில் சேவல் யாருடையது என தெரியவில்லை. அதனால் சேவலைக் காணவில்லை என அதற்குரியவர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை. அதனால் யாராவது வந்து புகார் அளிக்கும் வரை போலீஸார் பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரி ரமேஷ் பாபு சேவலை சிறையிலேயே அடைத்து வைத்துள்ளார். அதற்கான உணவுகளையும் தண்ணீரையும் வைத்துள்ளார். இந்த செய்தி வைரலான நிலையில் சிறையில் இருக்கும் சேவலை மக்கள் பார்த்து வருகிறார்களாம்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சேவல் சண்டையின் போது 45 வயது மதிப்புடைய தங்குல்லா சதீஷ் என்ற உரிமையாளரின் சேவல் அச்சத்தில் பறந்தது. அதன் காலில் 3 அங்குல கத்தி கட்டப்பட்டிருந்தது. அந்த சேவலை பிடிக்க முயன்ற போது கத்தி சதீஷின் இடுப்பில் குத்திவிட்டது.

அப்போது ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அந்த கொலை வழக்கில் சேவல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மனிதர்களைத்தான் சிறையில் போடுவார்கள். ஆனால் இங்கு ஏன் சேவலை சிறையில் போட்டுள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது சேவல் எந்த தவறையும் செய்யவில்லை. ஆனால் அதை சிறையில் போட்டால்தான் பாதுகாப்பு, ஒரு வேளை எங்காவது பறந்து ஓடிவிட்டால் ஓனர் வந்து கேட்டால் யார் பொறுப்பேற்பது என்பதால் போலீஸார் அதை சிறையில் வைத்திருக்கலாம் என தெரிகிறது. ஆனால் வேளாவேளைக்கு நல்ல உணவு கிடைக்கிறதாம் சேவலுக்கு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+