Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அச்சாரம்".. முதலடியை எடுத்து வெச்ச கேசிஆர்.. "ரெடி"? இன்னும் 400 நாள்தான்.. விக்கித்த காங். + பாஜக

சந்திரசேகர ராவ் மேற்கொள்ளும் தேசிய அரசியலுக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சந்திரசேகர ராவ் கூட்டிய பொதுக்கூட்டமானது, தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.. பாஜக அல்லாத கூட்டணிக்கு தேசிய தலைவர்கள் தலைவராகி வரும்நிலையில், டெல்லியையே இந்த கூட்டம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தேசிய அரசியலில் கால்பதிக்கும் நோக்கத்தில், தன்னுடைய தனது கட்சியின் பெயரை, பாரத் ராஷ்ட்ர சமிதி என்று மாற்றினார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

அத்துடன் தன்னுடைய தேசிய கட்சி, பல்வேறு மாநிலங்களில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்றது.

 கேசிஆர்

கேசிஆர்

கம்மத்தில் உள்ள மைதானத்தில் மிக பிரமாண்டமாக கூட்டம் நடந்தது.. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் சந்திரசேகர ராவ், அதற்கான அச்சாரத்தைதான், இந்த பொதுக்கூட்டத்தில் வெற்றிகரமாக போட்டுள்ளார்.. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.

 400 நாட்களே

400 நாட்களே

சந்திரசேகர ராவின் தேசிய அரசியலுக்கு தொடர்ந்து ஆதரித்துவரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, தற்போது, பஞ்சரத்ன ரத யாத்திரை மேற்கொண்டு வருவதால், இந்த பொதுக்கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.. இந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசும்போது, "பாஜக ஆட்சி முடிய இன்னும் 399 நாட்கள் மட்டுமே இருக்கின்றன.. ஜனவரி மாதத்திலிருந்து சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறது அது உத்தராயணம். தேசிய அரசியல் தெற்கு நோக்கி நகர்வதால் அது தட்சிணாயனம்" என்றார்.

 நெருடும் நெருடல்

நெருடும் நெருடல்

தொடர்ந்து பினராயி விஜயன் பேசியபோது, பாஜகவுக்கு எதிராக ஒரு புதிய அணி உருவாகியிருக்கிறது.. கேரள அரசும் அதன் மக்களும் தெலுங்கானாவுடன் துணை நிற்கிறது.. ஆங்கிலேயரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டவர்கள் இன்று பதவிகளில் உள்ளனர், நம்முடைய தாய்மொழிகள் எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு இந்தியை தேசிய மொழியாக சித்தரிக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. என்று பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.. மிக சிறப்பாக இந்த கூட்டம் நடந்து முடிந்திருந்தாலும், பாஜகவுக்கு இது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கிறது. அதேபோல காங்கிரசுக்கும் நெருடலை தந்து வருகிறது.

முயற்சி

முயற்சி

பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பதற்காக, சில வருடங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு பெருத்த முயற்சியை மேற்கொண்டார்.. பல தேசிய தலைவர்கள் அந்த முயற்சிக்கு ஆதரவு தந்தாலும், இறுதியில் தோல்வியையே தழுவியது. இதற்கு பிறகு மம்தா பானர்ஜி அதே ரூட்டை எடுத்தார்.. ஆனால், அவர் பாஜகவை வலுவாக எதிர்க்கிறாரா? இல்லையா? என்பதே தற்போது குழப்பமாக உள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்கு பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலினும், பாஜக அல்லாத கூட்டணிக்கு, காங்கிரஸின் துணையுடன் முயற்சி செய்து வருகிறார்.

 யாத்திரை

யாத்திரை

அந்த பாணியில் சந்திரசேகர ராவும், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை முயற்சிப்பதால், அதற்கு பலன் கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.. காங்கிரஸை பொறுத்தவரை, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, சந்திரசேகர ராவின் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றிருப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது... இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையை தவிர்த்துவிட்டன என்பதை கவனித்து பார்க்க வேண்டி உள்ளது.

 3வது டீம்

3வது டீம்

அதேபோல, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, இடதுசாரிகள் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்றாலும், திமுக பங்கேற்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. ராகுல் காந்தி யாத்திரை நிறைவுநாள் நிகழ்ச்சியில், திமுக உட்பட 21 எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் அழைத்துள்ளது... ஆனால், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை...

 பிரதமர் வேட்பாளர்

பிரதமர் வேட்பாளர்

காங்கிரஸால் தவிர்க்கப்பட்ட கட்சிகள்தான், இன்று கேசிஆர் பக்கம் நின்றுள்ளன.. சுருக்கமாக சொல்லப்போனால், பாஜகவுக்கு எதிராக, 2 வகையான கூட்டணிகள் ஏற்படுமோ என்ற சூழல் உருவாகி உள்ளது.. ஆனால், இவர்களில் "பிரதமர் வேட்பாளர்" யார் என்ற அடுத்த சிக்கல் நிறையவே எழ வாய்ப்புள்ளது என்றாலும், இப்போதைக்கு பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள தேசிய தலைவர்கள் முயன்று வருகிறார்கள். அதேசமயம், பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த 3வது அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+