எல்லாருமே ஹைதராபாத் ஏரியில்.. ஓவைசி முதல் பல விஐபிக்கள் கலக்கம்.. புலி வாலை பிடித்த ரேவந்த் ரெட்டி
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைதராபாத் பேரிடர் தடுப்பு மற்றும் சொத்துகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஏரியில் உள்ள பல கட்டிடங்களை இடிக்க முடிவு செய்துள்ளது. இதில் நாகர்ஜூனா கட்டிடம் மட்டுமல்ல.. ஓவைசி முதல் பல முன்னாள் அமைச்சர்கள், விஐபிக்களின் கல்வி நிறுவனங்கள் கட்டிடம் இடிக்கப்பட போகிறது. இதனால் பலரும் கலக்கத்தில் உள்ளார்கள்.
இந்த கல்வியாண்டு முடியும் வரையாவது ஏரி நிலத்தில் கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஹைதராபாத் பேரிடர் தடுப்பு மற்றும் சொத்துகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம் ( சுருக்கமாக ஹைத்ரா என்று அழைக்கப்படுகிறது) பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

ஹைதரபாத் ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி நடிகர் நாகர்ஜூனாவின் என் கன்விக்சன் கட்டிடத்தை ஹைத்ரா அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினார்கள். அடுத்தடுத்து பல விஐபிக்கள் ஏரிக்களில் ஆக்கிரமிப்பு செய்து கல்வி நிறுவனங்கள், கட்டிடங்கள் கட்டி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் புலி வாலை பிடித்த கதையாக ஹைதராபாத் பேரிடர் தடுப்பு மற்றும் சொத்துகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு (HYDRAA) கடும் அரசியல் அழுத்தத்தில் சிக்கி உள்ளது.
தங்கள் பிள்ளைகள் படித்து வரும் கல்வி நிறுவனங்கள இடித்து தரைமட்டம் ஆக்கப்பட உள்ளதாக வெளியான தகவலால் பல பெற்றோர் கவலையில் உள்ளனர். தற்போது கல்வியாண்டு நடைபெற்று வருவதால் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இந்த கல்வியாண்டு முடியும் வரையாவது இடிக்கக்கூடாது என்று பல பெற்றோர்கள் ஹைத்ராவிற்கு கோரிக்கைகள் வைத்தபடி உள்ளனர்.
ஏஐஎம்ஐஎம் தள தலைவர் அக்பருதீன் ஓவைசியின் சாலார்-இ-மில்லத் கல்வி அறக்கட்டளை நடத்தும் பாத்திமா ஒவைசி கல்லூரி, பிஆர்எஸ் எம்எல்ஏ பல்லா ராஜேஷ்வர் ரெட்டிக்கு சொந்தமான அனுராக் கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் மல்லா ரெட்டியின் குடும்பம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏரி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பிஆர்எஸ் எம்எல்ஏ சி மல்லா ரெட்டியின் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹைத்ரா வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே ஹைட்ரா கமிஷனர் ஏவி ரங்கநாத் கூறும் போது, "பல பெற்றோர்கள் தன்னை அணுகி, இடிப்பதை கல்வியாண்டு முடியும் வரை ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கல்வி நிறுவனங்களை காப்பாற்றும்படி என்னிடம் மனு கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி குறித்து கவலைப்படுகிறார்கள். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விரைவில் அரசு மட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
பெற்றோர்களின் கோரிக்கையை பரிசீலித்து வரும் தெலுங்கானா அரசு, கல்வி நிறுவனங்களுக்கு தற்காலிகமாக விலக்கு அளித்தாலும் கோடை விடுமுறையின் போது ஆக்கிரமிப்புகளை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்றும் என்பதில் உறுதியாக உள்ளதாம். மேலும் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து இடமாற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என்று ஹைத்ரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஆர்வலர் லுப்னா சர்வத் என்பவர் 2014, 2017 மற்றும் 2024ல் ஏரிகளின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டார். இந்த படங்களில் தான், ஆக்கிரமிப்புகள் ஏரிகளில் எந்த அளவிற்கு நடந்துள்ளது என்பது வெளிப்படுகிறது. ஓவைசின் சாலார்-இ-மில்லத் அறக்கட்டளை, சந்திராயன்குட்டாவில் உள்ள சல்காம் செருவு ஏரியில் கட்டிடங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாம்.
இதேபோல் வெங்கடாபூர் கிராமத்தில் உள்ள நாடம் செருவு ஏரியை ஆக்கிரமித்ததாக அனுராக் கல்வி நிறுவனங்கள் மீது எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. நாடம் செருவு ஏரிக்கள் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேபோல்
சின்ன பந்தம் செருவு, லிங்கம் செருவு மற்றும் பஜன்சாய் குந்தா ஆகிய இடங்களில் இருந்து தண்ணீர் வராமல் தடுத்துவிட்டதாக மல்லா ரெட்டி நிறுவனங்கள் மீது புகார்கள் உள்ளன. 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு பெண்களுக்கான மல்லா ரெட்டி பல் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது. இதுவும் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இப்படி பல நிறுவனங்களின் கட்டிடங்கள் ஏரியில இருப்பது தெரிகிறது.
இதனிடையே தெலுங்கானா மாநில பாஜக இதுபற்றி நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், "ஹைட்ராவை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் அவர்கள் எப்படி நடவடிக்கை எடுக்குகிறார்கள் என்பதன் மூலம் தெரியவரும். ஓவைசியின் கல்வி நிறுவனங்கள் சல்காம் செருவை ஆக்கிரமித்துள்ளன. கேடிஆரின் பண்ணை வீடு மற்றும் பிற பிஆர்எஸ் தலைவர்களின் ஏரி ஆக்கிரமிப்புகள், காங்கிரஸ் தலைவர்களின் பண்ணை வீடுகள் போன்ற ஆக்கிரமிப்பாளர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க ரேவந்த் ரெட்டி அரசுக்கு தைரியம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications