நுபுர்சர்மாவை சாடிய உச்சநீதிமன்றம்! மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் என்ன சொன்னார் தெரியுமா?
ஐதராபாத்: நுபுர் சர்மாவின சர்ச்சை பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்துள்ளார்.
Recommended Video
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இது பெரும் விவாதமானது. இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்லாமிய நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பல வழக்குகள் பதிவு
இதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் புகார் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்பட பல இடங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன. போலீஸ் நிலையங்களில் இருந்து விசாரணைக்கு ஆஜராககோரி அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் விமர்சனம்
இந்நிலையில் தான் தனது மிரட்டல் இருப்பதாகவும், அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனக்கூறி நுபுர் சர்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்தது. ‛‛நுபுர் சர்மாவின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. நாடு தீப்பற்றி எரிவதற்கு அவர் மட்டுமே தான் காரணம். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறதா இல்லை அவரால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?. நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்'' என நீதிமன்றம் கடித்து கொண்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

மத்திய சட்ட அமைச்சரிடம் கேள்வி
இந்நிலையில் தெலங்கானா ஐதரபாத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய இந்த செயற்குழு கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தலைவர்கள், நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தான் நுபுர் சர்மா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்து பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

மத்திய அமைச்சர் கூறியது என்ன?
மத்திய சட்ட அமைச்சர் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் பற்றி நான் கருத்து தெரிவிப்பது முறையல்ல. எனக்கு தீர்ப்பு பிடிக்காவிட்டாலும் அல்லது ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்தாலும் கூட நான் கருத்து தெரிவிக்க விரும்புவது இல்லை. இந்த விவகாரத்தில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். கருத்து கூறும்படி எனக்கும் கோரிக்கைகள் வருகின்றனர். இதுபற்றி பொருத்தமான மன்றத்தில் நாங்கள் விவாதிப்போம். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்து என்பது வாய்மொழியாக கூறப்பட்டுள்ளதே தவிர அது தீர்ப்பின் ஒரு அங்கமாக இல்லை. இதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை'' என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications