அதுக்குன்னு இப்டியா.. சட்டை சரியில்லையாம்.. பாவம் அந்த டெய்லர்.. அதிர்ந்து போன ஆந்திரா..!

டெய்லரை அடித்து கொலை செய்த இளைஞர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: டெய்லர் ஒருவரை மிக கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் ஆந்திரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை தந்துவருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பீமாலியை சேர்ந்தவர் கூடுலீமா.. 45 வயதாகிறது.. இவர் ஒரு டெய்லர்.. வீட்டிலேயே தையல் எந்திரம் வைத்து, அந்த பகுதி மக்களுக்கு துணிகளை தைத்து வருகிறார்.

மனைவி பெயர் லட்சுமி.. இந்த தம்பதிக்கு சமந்தா, சுமன் என்று மகன், மகள் இருவரும் உள்ளனர்... சமந்தாவுக்கு திருமணமாகிவிட்டது.. ஆனாலும், அம்மா வீட்டிலேயே கணவருடன் ஒன்றாகவே வசித்து வருகிறார்...

 கணேஷ்

கணேஷ்

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர், கூடுலீமாவிடம் புத்தாண்டிற்கு அணிவதற்காக துணிகளை தைக்க கொடுத்துள்ளார்... 2 நாட்களுக்கு முன்பு அந்த துணிகளை வாங்கி தந்துள்ளார்.. நேற்றைய தினம் தைத்து முடித்ததும், அதை வாங்கி தன்னுடைய வீட்டுக்கு எடுத்து சென்று அணிந்து பார்த்துள்ளார்.. அப்போது சட்டை இறுக்கமாக இருந்துள்ளது...

டெய்லர்

டெய்லர்

இதனால் டெய்லரிடம் வந்த கணேஷ், அந்த சட்டையை பிரித்து சரி செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.. ஆனால் கூடுலீமாவோ, உடனடியாக சட்டையை சரி செய்து தரமுடியாது, நிறைய துணிகள் இருப்பதால் அதை தைக்க வேண்டும், இதை பிரித்து தைக்க நேரம் ஆகும் என்று கூறியுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கிளின்டன், சூரியநாராயணன் ஆகியோரை டெய்லர் வீட்டுக்கு வரவழைத்தார்..

தாக்குதல்

தாக்குதல்

நண்பர்கள் 3 பேருமே டெய்லர் கூடுலீமாவை வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கினர்... இதனால் வலி தாங்க முடியாமல் டெய்லர் அலறி கூச்சலிட்டார்... அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.. 3 பேரையும் தடுத்து நிறுத்தினர்.. ஆனால் அதற்குள் கூடுலீமா ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.. 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சுருண்டு விழுந்த டெய்லரை தனியார் ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்...

அதிர்ச்சி

அதிர்ச்சி

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவருக்கு உயிர் பிரிந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதுகுறித்து உடனடியாக பி.என்.பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்... கணேஷையும் கைது செய்துள்ளனர்.. புது சட்டையை சரியாக தைத்து தராத காரணத்தினால், ஒருவரை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+