சொந்த தொகுதியில் படுதோல்வி.. இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த ஜெகன்மோகனின் கட்சி!
அமராவதி: ஆந்திரப் பிரதேசம் புலிவெந்துலா மாவட்ட பஞ்சாயத்து பிராந்தியத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட லதா ரெட்டி, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஹேமந்த் ரெட்டியை 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்த தொகுதி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட நிலையில், இதில் இக்கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்திருக்கிறார்.
புலிவெந்துலாவில், கடந்த முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது Y.S.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மாவட்ட பஞ்சாயத்து பிராந்தியத் தொகுதியில் ஏற்கெனவே ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்தான் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் உயிரிழந்ததையடுத்து இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லதா ரெட்டி 6,735 வாக்குகள் பெற்று, தனது போட்டியாளரான YSRCPயின் ஹேமந்த் ரெட்டியை 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநாகரி கூறுகையில், "இது ஜனநாயகத்தின் வெற்றி. நாங்கள் மக்களுக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை வாக்களித்தோம், முடிவுகள் அனைவருக்கும் கண்கூடானவை. கடந்த 30 ஆண்டுகளாக இங்கு தேர்தல்கள் நடைபெறவில்லை, வேட்பாளர்கள் மக்கள் மீது திணிக்கப்பட்டனர். இந்த மாபெரும் வெற்றி, மக்கள் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது" என்று கூறினார்.
மறுபுறம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கூறுகையில், "காவல்துறையும் தெலுங்கு தேசம் தொண்டர்களும் இணைந்து ஆயிரக்கணக்கான ஆளும் கட்சி ஊழியர்களை வாக்குச் சாவடிகளில் நிறுத்தி, வாக்காளர்களை அச்சுறுத்தி, முகவர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து, முகவர் படிவங்களை கிழித்து, எங்கள் ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். இதை வாக்குப்பதிவு என்று சொல்ல முடியுமா? இதை தேர்தல் என்று சொல்ல முடியுமா? எங்கள் தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் - இத்தகைய அட்டூழியங்களைச் செய்தவர்களுக்கு ஜனநாயக ரீதியாக ஒரு பாடம் கற்பிக்கப்படும், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை" என்று கூறியிருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications