தெலுங்கானா: சர்ச்சை எம்எல்ஏ-வுக்காக ஒட்டுமொத்த பாஜக தலைகளும் சடுகுடு ஆடும் விசித்திரம்-ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜா சிங் எம்.எல்.ஏ.வை தேர்தலுக்காக மீண்டும் கட்சியில் சேர்க்க பாஜக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
தெலுங்கானாவில் பிற மதங்களை அவதூறாக பேசி தொடர் சர்ச்சைகளில் சிக்கியார் ராஜா சிங் எம்.எல்.ஏ.. நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக ஆகஸ்ட் மாதம் ராஜா சிங்குக்கு எதிராக பெரும் போராட்டங்கள் ஹைதராபாத்தில் வெடித்தன. ராஜா சிங் கைது செய்யப்படாமல் இருந்தால் வன்முறை உருவாகும் சூழ்நிலை இருந்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் ராஜா சிங் கைது செய்யப்பட்டார். ஆனால் உடனடியாக ஜாமீனில் விடுதலையாகிவிட்டார். அதே நேரத்தில் பாஜக, ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்து அறிவித்தது.

ராஜா சிங்-க்கு சீட் இல்லை?: தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் மீண்டும் ராஜா சிங் பெயர் அரசியல் களத்தில் அடிபடுகிறது. ராஜா சிங் வெற்றி பெற்ற கோஷா மஹால் தொகுதியில் மூத்த தலைவர் முகேஷ் கவுட் மகன் விக்ரம் கவுட், பாஜக வேட்பாளராக போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ராஜா சிங் தரப்பு கொந்தளித்து போயிருக்கிறது.
ராஜா சிங் ஆதரவு கோஷ்டி: பாஜகவில் பல்வேறு தலைவர்களும் ராஜா சிங்கை மீண்டும் கட்சியில் சேர்த்து அவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பாஜகவில் நபிகள் நாயகம் சர்ச்சையில் சிக்கிய நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் போல ராஜா சிங்கை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது இந்த தலைவர்களின் கோரிக்கை. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களிடையே பெரும் மோதலே வெடிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறதாம்.
போர்க்கொடி தூக்கும் ராஜா சிங்: அதேபொல தாம் வெற்றி பெற்ற Goshamahal -கோஷாமஹால் தொகுதியில் மீண்டும் போட்டியிட ராஜா சிங் விரும்புவதாக கூறப்படுகிறது. அப்படி கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை எனில் பாஜகவைவிட்டு விலகி ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணைவார் ராஜா சிங் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ராஜா சிங் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாம் பிஆர்எஸ் கட்சிக்கு தாவ மாட்டேன்; அப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் அரசியலில் இருந்து சற்று விலகி நின்று 'இந்து' தேசத்துக்கான கடமைகளை செய்வேன் என கூறியுள்ளார். ஒற்றை எம்.எல்.ஏ.வுக்காக ஒட்டுமொத்த பாஜக தலைகளும் முட்டி மோதுகின்றனர்!
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications