5 வருஷ காதல்.. தூக்கி எறிஞ்சிட்டா.. அதான் தனியே வரவழைத்து பலாத்காரம் செய்து கொலை.. காதலன் பகீர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் பேச்சை கேட்டு காதலனை திருமணம் செய்ய மறுத்த காதலியை அந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் மானாஜிபேட்டையைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீசைலன் (23) என்பவரை 2017ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார்.
இருவரும் தினமும் செல்போனில் பேசி வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 19 வயது மாணவிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் அந்த பெண், ஸ்ரீசைலனுடனான காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் எதிர்ப்பு
இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெண்ணிடம் ஸ்ரீசைலனை மறந்துவிடு, நாங்கள் நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என கூறியுள்ளனர். இதையடுத்து ஸ்ரீசைலனுடன் பேசுவதையே அந்த பெண் நிறுத்திவிட்டார். அவரது போனுக்கு எத்தனையோ முறை முயற்சித்தும் காதலனால் பேச முடியவில்லை.

பெண்ணின் பெற்றோர்
இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் ஸ்ரீசைலனிடம் சென்று ,எங்கள் மகளுக்கு வேறு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைக்க போகிறோம். இனி அவளை தொந்தரவு செய்யாதே என கூறினர். அதற்கு ஸ்ரீசைலன், அவர்களிடம் நானும் உங்கள் மகளும் 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். அவள் இல்லாவிட்டால் நான் இல்லை. எங்களை சேர்த்து வையுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.

தனியே அழைத்து சென்ற காதலன்
இந்நிலையில் கடந்த 5 ஆம்தேதி அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என அவரை வெளியே வர சொன்னார் ஸ்ரீசைலன், ஒரு முறை வா நாம் பேசி பிரிந்து விடலாம். அதன் பிறகு உன்னை தொந்தரவு செய்யவே மாட்டேன். நீ உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள் என கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண், காதலுடன் பைக்கில் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் திரும்பாத மகள்
இந்த நிலையில் வெளியே சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அந்த பெண்ணின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மறுநாள் காலை அந்த பெண்ணின் செல்போனிலிருந்து மெசேஜ் வந்தது. அதில் அப்பா, ஸ்ரீசைலனை காதலித்தேன், நீங்கள் எதிர்த்தீர்கள். தற்போது இன்னொருவரை காதலித்து வருகிறேன். அவரை திருமணம் செய்ய விரும்புகிறேன். உங்களிடம் கேட்டால் நீங்கள் மறுப்பீர்கள்.

காதலனுடன் திருமணம்
எனவே எனது காதலனை திருமணம் செய்ய ஹைதராபாத் செல்கிறேன். இனி என்னை தேட வேண்டாம் என குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து போலீஸில் பெற்றோர் மெசேஜை காட்டினர். இதையடுத்து அந்த பெண்ணின் செல்போனை சிக்னலை வைத்து டிரேஸ் செய்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் ஸ்ரீசைலனிடம் விசாரணை நடத்தினர்.

வாக்குவாதம்
அப்போது அவர் போலீஸாரிடம் கூறுகையில், அந்த பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு காட்டிற்கு அழைத்து சென்றேன். அங்கு மீண்டும் ஒரு முறை என்னை திருமணம் செய்து கொள், உன் அப்பா அம்மா சம்மதிக்காவிட்டால் என்ன, நாம் இப்படியே எங்கயாவது போய் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண்ணிடம் கேட்டேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும் என்னுடன் வாக்குவாதம் செய்தார்.

பலாத்காரம் செய்து கொன்றேன்
இதனால் ஆத்திரமடைந்த நான் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தேன். உடனே அவள் போலீஸுக்கு போகிறேன் என்றாள், இதனால் அச்சமடைந்த நான் அவளுடைய துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் இந்த கொலை தெரியாமல் இருக்க அவளுடைய மொபைலில் இருந்து அந்த பெண்ணின் அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பினேன். தற்போது மாட்டிக் கொண்டேன் என்றார்.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications