தெலுங்கானா: போடுங்கம்மா ஓட்டு தாமரை சின்னத்தை பார்த்து..வீடு வீடாக பிரசாரம் செய்த பாஜக நடிகை குஷ்பு!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்; தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஜூப்ளிஹில்ஸ் தொகுதியில் பாஜக வேட்பாளருக்காக வீடு வீடாக நடிகை குஷ்பு நேற்று இரவு பிரசாரம் செய்தார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் வரும் 30-ந் தேதி நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா களத்தில் பாஜகவும் மோதுகிறது.

Telangana: Actor Khushbu participates in door-to-door election campaign

தெலுங்கானாவில் பாஜக முகமாக இருந்த நடிகை விஜயசாந்தி அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவில் கணிசமான இடங்களைப் பெறுவதற்காக பாஜக படுதீவிரமாக முயற்சித்து வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர். தெலுங்கானா மாநில தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா நேற்று வெளியிட்டு பிரசாரம் செய்தார். தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வோம் என்றார் அமித்ஷாசெய்யும் என்றார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஜூப்ளிஹில்ஸ் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜகவின் நடிகை குஷ்பு வீடு வீடாக பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது பேசிய நடிகை குஷ்பு, ஆளும் பிஆர்எஸ் கட்சியால் மக்கள் சோர்ந்து போய்விட்டனர். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். தெலுங்கானாவில் போதும் போதும் என்கிற அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றுள்ளன; வாரிசு அரசியல் அரங்கேறுகிறது. பிஆர்எஸ் கட்சியோ காங்கிரஸ் கட்சியோ எங்கு பார்த்தாலும் ஊழல்தான். பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து தெலுங்கானா மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+