தெலுங்கானா: பாஜகவை விட்டு விலகும் நடிகை விஜயசாந்தி... காங்கிரஸில் இணைகிறார்?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் முழுமையாக ஓரம்கட்டப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகி நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, 1998-ல் பாஜகவில் இணைந்தவர். பாஜகவின் மகளிர் அணி செயலாளர் பதவியும் அப்போதே விஜயசாந்திக்கு கிடைத்தது. 1999 லோக்சபா தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து விஜயசாந்தி போட்டியிடக் கூடும் என்றெல்லாம் தலைப்பு செய்திகளில் அடிபட்டது. ஆனால் அப்போது சோனியா காந்தி பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அதிமுகவுக்கும் பிரசாரம் செய்தார் விஜயசாந்தி.

ஒருகட்டத்தில் தெலுங்கானா முழக்கத்தை முன்வைத்து தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் அப்போதைய டிஆர் எஸ் (இப்போதைய பிஆர்எஸ்) கட்சியில் விஜயசாந்தி இணைந்தார். அக்கட்சியின் மேதக் தொகுதி எம்.பி.யாகவும் 2009-ல் வென்றார் விஜயசாந்தி. 2014-ல் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமானார்.
கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார் விஜயசாந்தி. தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் விஜயசாந்திக்கு பாஜக மேலிடம் முக்கியத்துவம் தரவில்லை. இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய விஜயசாந்தி முடிவெடுத்துள்ளதாக தெலுங்கானா தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications