தேர்தலோ தேர்தல்: 3 நாளில் 2-வது முறையாக தெலுங்கானாவில் மோடி-ரூ8,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்!
ஹைதராபாத்: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு கடந்த 3 நாட்களில் இன்று 2-வது முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். தெலுங்கானாவில் ரூ8,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
தெலுங்கானாவில் ஞாயிற்றுக்கிழமையன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, தெலுங்கானாவின் நீண்டகால கோரிக்கையான தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. மேலும் ரூ13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டங்களை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

3 நாட்களில் 2-வது முறையாக வருகை: இதனைத் தொடர்ந்து இன்று 2-வது முறையாக மீண்டும் நிஜாமாபாத் வருகை தருகிறார் பிரதமர் மோடி. இன்றைய பயணத்தின் போது ரூ8,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். என்.டி.பி.சியின் தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 800 மெகாவாட் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.
மனோகராபாத் மற்றும் சித்திபேட்டையை இணைக்கும் புதிய ரயில் பாதை, தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் - கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்
ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்பு: சித்திபேட் - செகந்திராபாத் - சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு (சி.சி.பி) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆதிலாபாத், பத்ராத்ரி கொத்தகூடம், ஜெயசங்கர் பூபாலபள்ளி, ஜோகுலாம்பா கட்வால், ஐதராபாத், கம்மம், குமுராம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், மகபூப்நகர் (படேபள்ளி), முலுகு, நாகர்கர்னூல், நல்கொண்டா, நாராயண்பேட்டை, நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா, ரங்காரெட்டி (மகேஸ்வரம்), சூர்யபேட், பெத்தபள்ளி, வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த சி.சி.பி.க்கள் கட்டப்படும்.
சத்தீஸ்கரில் மோடி: முன்னதாக தேர்தல் நடைபெற உள்ள மற்றொரு மாநிலமான சத்தீஸ்கர் செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு ரூ26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications