ஓவைசி தம்பிக்கு சபாநாயகர் பதவியா.. எம்எல்ஏவாக பதவியேற்க மறுத்த பாஜகவினர்! பரபர தெலுங்கானா
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இடைக்கால சபாநாயகராக ஓவைசியின் தம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அக்பருதீன் ஓவைசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு எம்எல்ஏவாக பதவியேற்காமல் அவர்கள் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா கடந்த 2014ம் ஆண்டு புதிய மாநிலமாக உருவானது. இதையடுத்து 2014, 2019 சட்டசபை தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சி வென்றது. 2 முறையும் சந்திரசேகர்ராவ் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அந்த மாநிலத்தின் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்து முடிந்தது. அங்குள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் டிசம்பர் 3ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானாவில் ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் ஒரு கட்சி வெல்ல வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 64 இடங்களில் வென்றது. மாறாக சந்திரசேகர்ராவின் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில் மட்டுமே ஜெயித்து ஆட்சியை பறிகொடுத்தது. இதுதவிர பாஜக 8, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, சிபிஐ 1 இடத்திலும் வென்றன.
தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார். 11 பேர் அமைச்சர்களாகினர். இதையடுத்து தெலுங்கான சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக ஓவைசியின் தம்பி அக்பருதீன் ஓவைசி நியமனம் செய்யப்பட்டார்.
ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த இவர் சந்திரயான்குட்டா தொகுதியில் 6வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் அவர் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி இன்று பதவியேற்றார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து தெலுங்கானாவின் சட்டசபை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் இருக்கையில் அக்பருதீன் ஓவைசி அமர்ந்தார். இதையடுத்து அக்பருதீன் ஓவைசி முன்னிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் அக்பருதீன் ஓவைசி இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பதவியேற்பு நிகழ்ச்சியை பாஜக முற்றிலுமாக புறக்கணித்தது. இவர்கள் தெலுங்கானாவின் புதிய சபாநாயகர் நியமனம் செய்யப்பட்ட பிறகு பதவியேற்க உள்ளார். இந்த பொறுப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications