பாஜக எதிர்ப்பு கட்சிகளின் பாட்னா மீட்டிங்- தலைவெச்சுகூட படுக்கமாட்டோம்யா.. கேசிஆர் கட்சி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி முயற்சிக்கு ஆதரவு தர முடியாது என தெலுங்கானா ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி அறிவித்துவிட்டது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ல் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை எனவும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி அறிவித்திருக்கிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்கிற முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்; அவருடன் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவும் இணைந்துள்ளார். பாஜக அல்லாத பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சந்தித்த நிதிஷ்குமார், பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துவிட்டனர். ஜூன் 12-ந் தேதி கூட்டத்தில் தம்மால் பங்கேற்க இயலாது என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் செல்ல இயலாத நிலையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவர் பாட்னா கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருந்தாலும் ங்கிகாங்கிரஸ் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Telangana BRS not to attend anti-BJP Opposition parties Patna meet

இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ்., பாட்னா எதிர்க்கட்சிகளின் சங்கமத்தில் பங்கேற்க போவது இல்லை என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கேடி ராமராவ் கூறியதாவது: இந்தியாவில் பிரதான எதிர்க்கட்சி என்பதே கிடையாது. இந்த இடத்தை நிரப்புவதற்குதான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்ற பெயரையே பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றி இருக்கிறோம். இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி என்ற இலக்கை நோக்கித்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத மெகா கூட்டணியைத்தான் உருவாக்க விரும்புகிறோம். தெலுங்கானா மாடல் வளர்ச்சியையே ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான முன் மாதிரியாக வைக்கிறோம் நாங்கள். இப்போதைக்கு அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் கால் பதிக்க கவனம் செலுத்தி வருகிறோம். ஆகையால் பாட்னா கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றார்.

பாஜக, காங்கிரஸ் அல்லாத மெகா கூட்டணி முயற்சியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் திடீரென முன்னெடுத்தார். ஆனால் காங்கிரஸை உள்ளடக்காமல் தனித்த 3-வது அணி என்பது சாத்தியமானது இல்லை என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர். இன்னொருபக்கம் தெலுங்கானா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராகவே காங்கிரஸ், பாஜக நிற்கின்றன. ஆகையால் தெலுங்கானா அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய அரசியலில் காங்கிரஸை ஏற்க மறுக்கிறது பிஆர்எஸ் கட்சி. ஆகையால்தான் பாட்னா சங்கமத்துக்கு பிஆர்எஸ் செல்லவில்லை என்கின்றன தெலுங்கானா மாநில அரசியல் வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+