நிஜமாகவே பாகிஸ்தானுக்குள் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதா? ஆதாரமே இல்லையே: தெலுங்கானா முதல்வர்
ஹைதராபாத்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது குறித்து ஆதாரமே இல்லையே என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து 4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது குறித்து ஆதாரமே இல்லையே என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். "40 உயிர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதல் என்பது உளவுத்துறையின் தோல்வி. மோடிக்கு எல்லாமே அரசியல், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகதான் எல்லாமே, எனவே மோடியின் சிந்தனை நாட்டுக்கு ஏற்புடையதாக இல்லை.
அவர்கள் எல்லா விமர்சனங்களுக்கும் ஜெய்ஸ்ரீராம் என்று பதில் சொல்கிறார்கள். பாஜகவும், மோடியும் இல்லாமல் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை என்ன செய்துக்கொண்டிருந்தது? புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் மூலம் மோடிஜி அரசியல் ஆதாயம் தேட முயன்றார்.
பிரதமரிடம் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? புல்வாமா சம்பவம் ஏன் நடந்தது? ஏன் நடக்க அனுமதித்தீர்கள்? உள்நாட்டு பாதுகாப்புக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? IB, R&AW போன்ற ஏஜென்சிகளை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை? இது உங்கள் தோல்வி.. உண்மையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததா என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. எனவே, உள்நாட்டு பாதுகாப்பு என்பது காங்கிரசின் பொறுப்பு. யாருடைய கையிலும் நாட்டை விட்டுச் செல்ல நாங்கள் தயாராக இல்லை" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்
இவரது விமர்சனத்திற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். "ஹைதராபாத்தில் கோகுல் சேட், மெக்கா மஸ்ஜித், தில்சுக்நகர், லும்பினி பார்க் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான காங்கிரஸ், தேசப் பாதுகாப்பு பற்றிப் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். தெலுங்கானா முதல்வர் மலிவான அரசியல் மைலேஜுக்காக இந்திய இராணுவத்தின் தியாகங்களை கேள்விக்குட்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை" என்று பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications