தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது.. படுக்கை அறைக்குள் சென்று தூக்கியது போலீஸ்
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா காங்கிரஸ் செயல்தலைவர் ரேவந்த் ரெட்டியின் வீட்டின் வாசல் கதவை உடைத்து படுக்கை அறையில் இருந்த அவர் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ரேவந்த் ரெட்டி. இவர் பரபரப்பு அரசியல் நடத்துவதில் வல்லமை படைத்தவர். இவர் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விக்ரதாபாத் மாவட்டத்தில் உள்ள கொண்டக்கல் தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார்.

முதல்வர் பரப்புரை
கொண்டக்கல் தொகுதி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை அங்கு நடைபெற இருக்கும் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் பேச இருக்கிறார்.

போலீஸார் கைது
இந்த நிலையில் இன்று கொண்டக்கல் தொகுதியில் முழு அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்த ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் ரேவந்த் ரெட்டியை கைது செய்ய இன்று அதிகாலை அவருடைய வீட்டுக்கு போலீஸார் சென்றனர்.

காவல் நிலையத்தில்...
அப்போது வீட்டின் கதவை உடைத்து படுக்கை அறைக்குள் புகுந்து ரேவந்த் ரெட்டியை கைது செய்து போலீஸார் அழைத்து சென்றனர். தற்போது அவரை ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள ஷம்ஷதாபாத் காவல் நிலையத்தில் போலீஸார் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் அவர் தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேவந்த் ரெட்டி கைது காரணமாக கொண்டக்கல் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு அங்கு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications