கோட்டை விடுகிறாரா கேசிஆர்.. 10 வருட பிஆர்எஸ் ஆட்சி.. ஹாட்ரிக் வெற்றியை தருமா.. தடதடக்கும் தெலுங்கானா
ஹைதராபாத்: சந்திரசேகர ராவின் கடந்த 10 வருட ஆட்சியில் எப்படியிருந்தது தெலுங்கானா? மாநில மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பிஎஸ்ஆர் பெற்றிருக்கிறதா?
தெலுங்கானாவில் ஒரு காலத்தில் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்குவது கேள்விக்குறியாக இருந்த நிலையில், 'மிஷன் பகீரதா' என்ற திட்டத்தின் மூலம், அம்மாநில மக்களுக்கு, குழாய் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டுவந்தவர் கேசிஆர் என்பதை மறுக்க முடியாது.

மின்சார துறை: அதேபோல, மத்திய நீர் மின்சாரத்துறையின் கீழ் இயங்கும் குடிநீர் மற்றும் துப்புரவு பணியின் நீர் தர தகவல் அறிக்கையின்படி, தெலுங்கானாவில் மட்டும் 99.95 சதவீத அளவுக்கு குடிநீரின் தரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. அதனால்தான், மத்திய அரசின், "மிஷன் பகீரதா" தேசிய நீர் இயக்க விருது, "ஜல் ஜீவன்" விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருப்பதையும் மறுக்க முடியாது
விவசாயம் வளர்ந்துள்ளது. விளைச்சல் பெருகியுள்ளது.. தேசிய உற்பத்தியில் வேளாண் துறையில் ஒரு குறிப்பிடத்தக்கதை தெலுங்கானா பெற்றிருப்பதையும் மறுக்க முடியாது. முக்கியமாக, பனை எண்ணெய் சாகுபடியில் தெலுங்கானா ஏற்றம் கண்டிருக்கிறது.
பனை எண்ணெய்: குறிப்பாக, தெலுங்கானா அன்று உருவானபோது, 32 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே அம்மாநிலத்தில் பனை எண்ணெய் பயிரிடப்பட்ட நிலையில், இன்று 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரவியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஆனால், 10 ஆண்டுகால ஆட்சியில் தெலங்கானாவில் முதல்வர் கேசிஆர் தரப்பிலும், அவரது அமைச்சர்கள் தரப்பிலும் ஊழலே இல்லை என்று சொல்ல முடியுமா? என்று பாஜக கேள்வி எழுப்புகிறது. அத்துடன், கேசிஆர் மகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரப்பில் நடத்தப்பட்ட ரெய்டுகள் ஏன்? 'சுத்தமான கை' என்று மார்தட்டி சொல்லிக்கொள்ளுமா பிஆர்எஸ்? என்று சவால் விடப்படுகிறது.
வேலைவாய்ப்பு: வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதாகவும், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டி தருவதாகவும் கே.சி.ஆர் அரசு அன்று சொன்னது என்னாயிற்று? என்று பாஜக இப்போதுவரை கேள்வி எழுப்புகிறது.
பட்டயக் கல்லூரி அமைக்கப்படும் என்று சொன்னார்களே, அதை செய்தார்களா? நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும் ஏதாவது செய்தார்களா? எந்த திட்டமாவது கொண்டுவந்தார்களா? என்ற கேள்விகள் தெலுங்கானாவில் ஒலித்து கொண்டிருக்கிறது.
சவால்: மொத்தத்தில், இது சந்திரசேகர ராவுக்கு, இது ஒரு சவாலான தேர்தல்.. 2014, 2018 தேர்தல்களில் போட்டியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வலம்வந்தவருக்கு, இன்று பெரும்பான்மையான ஆதரவு இல்லை என்கிறார்கள்.. பார்ப்போம் என்ன முடிவு வரப்போகிறதென்று??
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications