தெலுங்கானா: எந்த கட்சிக்கு காத்திருக்கிறது மரண அடி? பீனிக்ஸ் போல விஸ்வரூபம் காட்டுமா காங்கிரஸ்?
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி தற்போது 3-வது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் 2014, 2018 தேர்தல் முடிவுகளை ஒப்பிடுகையில் இந்த தேர்தல் யாருக்கு சாதகமாக அமையக் கூடிய சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் 2014-ம் ஆண்டு முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2014-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலில் அப்போதைய டிஎஆர்எஸ் - தற்போதைய பிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

தெலுங்கனாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள்.
2014-ம் ஆண்டு தெலுங்கானா தேர்தல் முடிவுகள்:
பி.ஆர்.எஸ்.- 63 (34%)
காங்கிரஸ் - 21 (25%)
தெலுங்குதேசம் -15 (14.5%)
பாஜக - 5 (7%)
ஓவைசி மஜ்லிஸ் கட்சி - 7
2014-ம் ஆண்டு தேர்தலில் தெலுங்குதேசம், பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள்:
பி.ஆர்.எஸ்.- 88 (46.9%)
காங்கிரஸ் - 19 (28.4%)
தெலுங்குதேசம் -2 (3.5%)
பாஜக - 1 (6.98%)
ஓவைசி மஜ்லிஸ் கட்சி - 7 (2.7%)
2018 சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
2023 தெலுங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பான பல கருத்து கணிப்பு முடிவுகள் இதுவரை வெளியாகி உள்ளன.
ஏபிபி- சி வோட்டர் கருத்து கணிப்பு:
பி.ஆர்.எஸ்.- 43-55 இடங்கள்
காங்கிரஸ் - 48- 60 இடங்கள்
பாஜக - 5-11 இடங்கள்
இந்தியா டிவி கருத்து கணிப்பு:
பி.ஆர்.எஸ்.- 70 இடங்கள்
காங்கிரஸ் - 34 இடங்கள்
பாஜக - 7 இடங்கள்
மஜ்லிஸ் கட்சி - 7 இடங்கள்












Click it and Unblock the Notifications