இரவில் கவிதாவிடம் கணவர் கேட்ட கேள்வி.. அதுக்கு தூங்கற குழந்தைகளையா? படிச்சவங்களே இப்படி செய்யலாமா?
ஹைதராபாத்: படித்த நபர்களே இப்படியொரு விபரீத முடிவை எடுத்தால், பாமர மக்கள் என்ன செய்வார்கள்? தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைத்துள்ளது.. இந்த வேலையை நம்பி, குடும்பத்துடன் மாற்றலாகி, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். ஆனால், திடீரென வேலை போய்விடவும், திக்குமுக்காடி விட்டார் விரிவுரையாளர்.. இது தொடர்பான விசாரணை ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தி என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர்.. இவருக்கு 44 வயதாகிறது.. ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.. மனைவி பெயர் கவிதா.. 35 வயதாகிறது.. இவர்களுக்கு ஸ்ரீதா(15), மகன் விஸ்வன்(10) என்று 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் ஹைதராபாத் ஹப்சிகுடாவில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு, சந்திரசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. திடீரென வேலை போய்விடவும் வருமானமின்றி அவதிப்பட்டார். குடும்பமே வறுமையில் சிக்கியது. இதனால் மனவேதனை அடைந்த சந்திரசேகர், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளலாமா? என்று கவிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு கவிதாவும் சம்மதித்தார்.

வாயில் விஷத்தை ஊற்றினார்கள்
அதன்படி, நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்த மகனின் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டார்கள்.. மகளை, தூக்கில் தொங்கவிட்டுள்ளார்கள்.. 2 குழந்தைகளுமே கொஞ்ச நேரத்தில் இறந்துவிட்டனர்.. பிள்ளைகள் இறந்தது உறுதியானதுமே, சந்திரசேகரும் கவிதாவும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இன்று காலை, இவர்களது வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்தது.. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோதுதான், குடும்பமே சடலமாகி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.. விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். பிறகு அந்த வீட்டில் சந்திரசேகர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றையும் கண்டெடுத்தனர்.
சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக பிரச்சனை
அதில், "நான் சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக பிரச்சனை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். எங்கள் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகளவிலான பிரச்னைகளை எதிர்கொண்டோம். எங்களின் சாவுக்கு யாரும் காரணமில்லை. வேறு வழியின்றி நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். இந்த முடிவை எடுத்ததற்கு வருந்துகிறோம்" என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ராஜேந்தர் சொல்லும்போது, "நாங்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளோம், மேலும் வழக்கை விசாரித்து வருகிறோம்" என்றார்.. இப்போதைக்கு சந்தேக மரணம் என்றே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி வேலைக்காகவே குடிபெயர்ந்து வந்தனர்
மஹபூப்நகர் மாவட்டத்தில் முகுரால்லா கிராமத்தை சேர்ந்த இவர்கள், ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைக்கவும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் குடிவந்தார்களாம்.. ஏற்கனவே உடல்நல பாதிப்பால் அவதிப்பட்ட நிலையில், திடீரென வேலை போய்விடவும், குடும்ப வறுமையையும், கடனையும் சமாளிக்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
கடன் தொல்லையாலும், வறுமையாலும், மகன், மகளை கொன்றுவிட்டு, தம்பதி இருவரும் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் பேரதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications